பக்கம்:பௌத்த தருமம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்தமும் சாதிப் பிரிவினையும்

149



கூட்டுவோனைப் புத்தரே நேரில் சங்கத்தில் சேர்த்துக் கொண்டார். அவன் பின்னால் ஸுநித முனி என்று அழைக்கத்தக்க பெருமை பெற்றிரும்தான். கொள்ளையும் கொலையுமே தொழிலாய்க் கொண்டிருந்த அங்குலிமாலனைப் பெருமான் ஆட்கொண்டமை 'போதி மாதவன்' என்ற புத்த சரிதையில் விவரிக்கப் பெற்றுள்ளது. அவனும் பின்னால் கருணை மிகுந்த முனிவனாக விளங்கினான். அம்பபாலி, விமலா என்ற கணிகையரும், தாழ்ந்த குலத்தார் என்று கருதப்பெற்ற பூர்ணா, சாபா முதலியோரும் சிறந்த பிக்குணிகளாக விளங்கிவந்தனர்.

இவ்வாறு சங்கத்திலே சேர்ந்த பிக்குகளும் பிக்குணிகளும் சாதிப்பற்றையும், சாதிப் பெயர்களையும் அறவே கைவிட்டுவிட வேண்டும் என்று புத்தர் பெருமான் விதித்திருந்தார். ஆனால் பௌத்த உபாசகர்களான பொதுமக்கள், தருமத்தில் சேர்ந்த பிறகு, தத்தம் சாதிகளை அடியோடு மறந்துவிட வேண்டும் என்று அவர் கண்டிப்பாக விதி செய்ய வில்லை என்று தெரிகின்றது. ஆயினும் பௌத்த தருமத்திற்கும் உபாசகர்களிடையே நிலவியிருந்த சாதிப் பிரிவினைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. சாதிகள் சமுதாய வாழ்வில்-மக்களுடைய பழக்கவழக்கங்களில் மட்டுமே தென்பட்டன; சமயவாழ்வில் அவை தலைகாட்டவில்லை.

புத்தர் காலத்தில் சாதிகள் நிலை

இந்து சமுதாயத்தில் சாதிப் பிரிவினை சமயத்தோடு சேர்ந்தே யிருப்பது. புத்தர் காலத்தில் சாதிகள் இரும்புச் சட்டங்களைப் போல் இறுகியிருக்கவில்லை என்றாலும், சாதிகள் அப்போதே பரவி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/156&oldid=1386805" இலிருந்து மீள்விக்கப்பட்டது