பக்கம்:பௌத்த தருமம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

பெளத்த தருமம்


முடியாது, நடுவில் இருப்பவரும் பார்க்க முடியாது, கடைசியில் இருப்பவரும் பார்க்க முடியாது என்பதைப் போலவே, இந்தப் பிராமணர்களுடைய பேச்சும் இருப்பதாக நான் கருதுகிறேன். முதலில் இருப்பவரும் காணவில்லை, நடுவில் இருப்பவரும் காணவில்லை. கடைசியில் இருப்பவரும் காணவில்லை. ஆகவே இந்தப் பிராமணர்களுடைய பேச்சு பரிகாசத்திற்கு இடமாயும், வெறும் சொற் குவியலாயும், பொருளற்ற வெற்றுரையாயுமே இருக்கின்றது!

இவர்கள் சூரியனும் சந்திரனும் உதிக்கும் திசையையும், அடையும் திசையையும் பார்த்துப் பிரார்த்தனை செய்கிறார்கள், தோத்திரம் செய்கிறார்கள், கைகளைக் குவித்துத் திரும்பி நின்று அவைகளை வணங்குகிறார்கள்; இவர்கள் மற்ற மக்களைப்போல் சூரியனையும் சந்திரனையும் பார்க்க முடியுமா, வசிட்டா?

வசிட்டன் — நிச்சயமாக அவர்களால் முடியும்.

புத்தர் — மற்ற மக்களைப்போல் சூரியனையும் சந்திரனையும் பார்க்கக் கூடிய பிராமணர்கள், சூரியனோடும், சந்திரனோடும் ஐக்கியமாகும் வழியைக் குறித்துக் காட்ட முடியுமா ?

வசிட்டன் — நிச்சயமாக முடியாது!

புத்தர் — ஆகையால், பிராமணர்கள் தங்கள் நேரில் பார்க்கும் பொருளோடு ஐக்கியமாவதற்குக்கூட வழிகாட்ட இயலாதவர்கள் என்று நீ ஒப்புக்கொள்கிறாய்; அவர்களில் எவரும் பிருமத்தைக் கண்டதில்லை, அவர்க ளுடைய சீடர்களும் கண்டதில்லை, ஏழு தலைமுறைக்கு முந்திய அவர்களுடைய முன்னோர்களும் கண்டதில்லை. பழைய ரிஷிகளும் கூடப் பிருமத்தை அறிந்திருந்ததாகப் பாவனை செய்து கொள்ளவில்லை, பிருமம் எங்கேயிருக்கிறது என்பதைப் பார்த்ததுமில்லை. அப்படியிருந்தும், பிராமணர்கள், தாங்கள் பார்த்திராத, அறிந்திராத, ஒன்றோடு இரண்டறக் கலப்பதற்கு வழிகாட்ட முடியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/167&oldid=1386795" இலிருந்து மீள்விக்கப்பட்டது