பக்கம்:பௌத்த தருமம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்தமும் சாதிப் பிரிவினையும்

165


பேசும் போதும் நீ என்ன கேட்டிருக்கிறாய்?

பிருமம் மனைவி செல்வம் முதலியவைகளைப் பெற்றிருக்கிறதா, இல்லையா?

வசிட்டன் - இல்லை.

புத்தர் - பிருமத்தின் உள்ளத்தில் கோபம் நிறைந்திருக்கிறதா, இல்லையா ?

வசிட்டன் - கோபமில்லை.

புத்தர் - பிருமத்தின் உள்ளத்தில் துவேஷம் நிறைந்திருக்கிறதா, இல்லையா?

வசிட்டன் - துவேஷமில்லை.

புத்தர் - அதன் மனம் பரிசுக்கமானதா, களங்கமுற்றதா ?

வசிட்டன் - பரிசுத்தமானது.

புத்தர் - அது தன்னடக்கமுள்ளதா, இல்லையா ?

வசிட்டன் - அடக்கமுள்ளது.

புத்தர் - வசிட்டா! மூன்று வேதங்களையும் கற்றுணர்ந்த பிராமணர்கள் மனைவிமார்களையும், செல்வங்களையும் பெற்றிருக்கிறார்களா, இல்லையா ?

வசிட்டன் - அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

புத்தர் - அவர்களுக்குக் கோபம் உளதா, இல்லையா?

வசிட்டன் - உளது.

புத்தர் - அவர்கள் இதயங்கள் பரிசுத்தமாயிருக்கின்றனவா, இல்லையா?

வசிட்டன் - இல்லை.

புத்தர் - அவர்கள் தன்னடக்கமுடையவர்களா, இல்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/172&oldid=1386812" இலிருந்து மீள்விக்கப்பட்டது