பக்கம்:பௌத்த தருமம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்தமும் சாதிப் பிரிவினையும்

169


இதுவும் அவன் பெற்றுள்ள நல்லொழுக்கம்.

அவன் பொய்யைப் புறக்கணித்துத் தவறானதைப் பேசுவதிலிருந்து தப்பித்துக் கொள்கிறான், சத்தியத்திலிருந்து அவன் விலகுவதில்லை. நம்பிக்கைக்குப் பாத்திரமாயும், விசுவாசத்துடனும் நடப்பதால், அவன் தன்னோடு வாழும் மக்களை ஏமாற்றித் தீங்கு செய்வதில்லை.

இதுவும் அவன் பெற்றுள்ள நல்லொழுக்கம்.

அவதூறாகப் பேசுவதை அகற்றிவிட்டு, அவன் பிறரைத் தூஷணை செய்யாமலிருக்கிறான். தான் கேள்விப்படுகிற விஷயங்களைக் கதைகளாகத் திரித்துப் பேசி அவன் மக்களிடையே சச்சரவை உண்டாக்குவதில்லை. இவ்வாறு அவன் பிரிந்திருப்பவர்களை ஒன்று சேர்ப்பவனாகவும், நண்பர்களை உற்சாகப் படுத்துபவனாகவும், சமாதானம் விளைப்பவனாகவும், சாந்தியை விரும்புபவனாகவும், சாந்திக்காகவே பாடுபடுபவனாகவும், சாந்தியை விளைக்கும் சொற்களையே பேசுபவனாகவும் விளங்குகிறான்.

இதுவும் அவன் பெற்றுள்ள நல்லொழுக்கம்.

இன்னாச் சொற்களையும், கடுமொழிகளையும் அவன் தன் பேச்சிலிருந்து விலக்கிவிடுகிறான். மனிதப் பண்புக்கு, ஏற்ற சொல்லாகவும், செவிக்கு இனியதாகவும், அழகியதாகவும், இதயத்தைத் தொடக்கூடியதாகவும், நாகரிகமுடையதாகவும், மக்களுக்கு உவகையூட்டுவதாகவும், மக்கள் விரும்புவதாகவுமுள்ள சொற்களேயே அவன் பேசுகிறான்.

இதுவும் அவனுடைய மேன்மைக் குணமாகும்.

அவன் வீண் பேச்சை விலக்கிவிடுவதால், அறிவீனமான சம்பாஷணை அவனிடமில்லை. அவன் தக்க காலத்திலேயே பேசுகிறான்; உள்ளதையே பேசுகிறான்; நடந்ததையே சொல்கிறான்; நல்ல தருமக் கொள்கைகளையே .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/176&oldid=1386884" இலிருந்து மீள்விக்கப்பட்டது