பக்கம்:பௌத்த தருமம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

பெளத்த தருமம்



சமயப் பூசல்கள், தத்துவம் பற்றிய விவாதங்கள் முதலியவற்றில் சில பிராமணர்களைப்போல் பிக்கு தலையிடுவதில்லை என்றும், அரசர்கள், மந்திரிகள், படை வீரர்கள், செல்வந்தர்கள் முதலியோரிடையே சில பிராமணர்கள் தூதர்களாயிருந்து ஏவிய பணிகளைச் செய்வதுபோல் பிக்கு செய்வதில்லை என்றும் அவர் எடுத்துக் காட்டினார்.

சாமுத்திரிகா லட்சணங்களை ஆதாரமாய்க் கொண்டு பலன்கூறுதல், குறி, ஆரூடம் முதலியவை பார்த்துச் சொல்லல், கனவுப் பலன்கள், சகுனப் பலன்கள், எலிகள் கடித்த துணிகளைப் பார்த்து அதிருஷ்டங்களைக் கூறல், அக்கினி தேவனுக்கு யக்ஞங்கள் செய்தல், உயிர்ப் பலியிட்டு யாகங்கள் செய்தல், போரில் வெற்றி பெறவும், பிசாசுகளை ஓட்டவும், நல்ல தானியங்கள் விளையவும், பாம்பு விஷம், எலி விஷம் முதலியவற்றை இறக்கவும் என்று மந்திரங்களைப் போதித்தல், விலங்கினங்களின் பாஷைகளை அறிந்ததுபோல் பாவனை செய்தல், இரத்தினங்கள், ஆயுதங்கள், உடைகள் முதலியவற்றின் குணதோஷங்களைக் கூறுதல், ஆடவர், பெண்டிர், இளைஞர், மங்கையர், அடிமைகள் முதலியோருடைய குணதோஷங்களையும், யானைகள், குதிரைகள், மாடுகள் முதலிய மிருகங்களின் குணதோஷங்களையும் பார்த்துக் கூறுதல், எதிர்கால நிகழ்ச்சிகளை அறிந்து கூறுதல், திருமணம், தம்பதிகளின் பிரிவு முதலியவைகளில் பொய் கலந்த ஆலோசனைகள் கூறுதல், சொத்துச் சேர்க்கவும், பிறருக்கு வறுமையுண்டாக்கவும், குழந்தைகள் பெறவும், உடலின் அங்கங்களை முடக்கவும் மந்திரங்கள் சொல்லிக் கொடுத்தல், மருந்துகள் தயாரித்து வைத்தியம் செய்தல் முதலிய எத்தனையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/179&oldid=1386840" இலிருந்து மீள்விக்கப்பட்டது