பக்கம்:பௌத்த தருமம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்தமும் சாதிப் பிரிவினையும்

173



காரியங்களைச் சில பிராமணர்கள் செய்து வந்ததைக் கண்டித்து, அவைகளில் எதையும் பிக்கு செய்வதில்லை என்று புத்தர் கூறினார்.

பிக்கு தியானத்தில் அமர்ந்து, உலகின் ஒரு திசை முழுவதிலும் தன் அன்பு நிறைந்த சிந்தனைகள் பரவும்படி செய்து, பின்னர் அதுபோலவே மற்ற மூன்று திசைகளிலும் பரவச்செய்து, எல்லா உயிர்களையும் அன்போடும், ஆதரவோடும், தயையோடும் தழுவிக்கொண்டு, உலகம் முழுதிலும், உயரேயும், கீழேயும், சுற்றிலும், எங்கணுமே அன்பு வெள்ளம் பெருகும்படி செய்வதே பிருமத்தோடு ஐக்கியமாகும் வழி என்று பெருமான் இறுதியாக வசிட்டனுக்கு எடுத்துரைத்தார்.

சரணாகதி

அவனும் பாரத்துவாஜனும், புதையற்பொருளைக் கண்டெடுத்ததுபோல், மன மகிழ்ந்து, ஐயனையும், தருமத்தையும், சங்கத்தையும் அடைக்கலமாக ஏற்றுக்கொண்டு, 'இன்று முதல் எங்கள் உயிருள்ள வரை எங்களைச் சீடர்களாக, தருமத்தில் உண்மையான நம்பிக்கையுள்ளவர்களாக, அங்கீகரிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டனர்.




"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/180&oldid=1386847" இலிருந்து மீள்விக்கப்பட்டது