பக்கம்:பௌத்த தருமம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

பெளத்த தருமம்



இதன் விதிகளுக்கு விரிவுரையாக அமைந்துள்ளது. விநய பிடகத்தோடு அதைவிடப் பெரிதாக அமைந்துள்ள அதன் வியாக்கியானத்தையும் பிக்குகள் கற்றுணர வேண்டும். பிக்குகளுக்குப் பாதி-மொக்கம் அமைந்திருப்பது போலவே, பிக்குணிகளுக்குரிய விதிகளைப் 'பிக்குணி விபங்க'த்திலே காணலாம்.

ஒவ்வொரு பிக்குவும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் 227 என்று வகுக்கப்பெற்றுள்ளன. இவைகளைத் தவிர, பௌத்த மடாலயங்களின் தலைவர்களான தேரர்கள் அவ்வப்போது கூறும் நியமங்களையும் பிக்கு ஏற்று நடந்துகொள்ள வேண்டும்.

புத்தர் காலத்தில் பிக்குகள் சங்கம், பிக்குணிகள் சங்கம் என்று சங்கம் இரண்டு பிரிவுகளாகச் செயற்பட்டு வந்தது. சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின்னால், பிக்குணிகள் சங்கம் நிறுத்தப்பட்டு விட்டது. அதன் பின்னர் இன்றளவும் பிக்குகள் சங்கம் மட்டுமே நடந்துவருகின்றது.

பிக்குகள் சங்கத்தில் இரண்டு வகையான உறுப்பினர்கள் இருப்பார்கள். ஏழிலிருந்து இருபது வயதுக்கு உட்பட்ட வித்தியார்த்திகள் முதல் வகை யினர். இரண்டாம் வகையினர் இருபது வயதும் அதற்கு மேற்பட்டுமுள்ள பிக்குகள். வித்தியார்த்திகள் கொல்லாமை முதலிய பத்துச் சீலங்களையும் மேற்கொண்டு ஒழுகி வரவேண்டும். பர்மாவில் ஒவ்வொரு சிறுவனும் ஏழிலிருந்து இருபது வயதுக்குள், எப்பொழுதாவது பௌத்த மடத்திற்குச் சென்று தங்கியிருந்து, வித்தியார்த்தியாகப் பயிற்சி பெறுவது இன்றும் வழக்கமாயுள்ளது. ஆனால் இதற்குப் பெற்றோர்கள் அல்லது போஷகர்களுடைய அநுமதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/187&oldid=1386881" இலிருந்து மீள்விக்கப்பட்டது