பக்கம்:பௌத்த தருமம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

பெளத்த தருமம்



ஒருவர் சங்கத்தில் பிக்குவாகச் சேர்வதைப் பிரவ்ரஜ்யை (பாலியில் பப்பஜ்ஜா) என்று சொல்வார்கள் - அதாவது உலகைத் துறத்தல், அல்லது வீடற்ற வாழ்க்கையை மேற்கொள்ளுதலாம். இது முதற்படி. இதிலேயிருந்து பயிற்சி பெற்ற பின், உபஸம்பதை என்ற முழுத் தீக்கை பெற்று முழுத் துறவியாகலாம். உபஸம்பதையே பௌத்த சங்கத்தின் உறுப்பினராவதைக் குறிக்கும். வெகு சிலருக்கு மட்டும் பிரவ்ரஜ்யை, உபஸம்பதை ஆகிய இரண்டு தீக்கைகளும் முதலிலேயே அளிக்கப் பெறுவதும் உண்டு. பிரவ்ரஜ்யைப் படியில் ஏறும்போதே திரிசரணங்களை மூன்று முறை கூறித் தசசீலங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

பிக்கு எட்டுப் பொருள்களைத் தவிர வேறு எதையும் தன் உடைமையாகக் கொள்ளக் கூடாது. அந்த எட்டும் மூன்று சீவர உடைகள், பிட்சைப் பாத்திரம், இடுப்பில் கட்டும் கச்சை, தண்ணீர் வடிகட்டுவதற்குரிய துணி, தலையை மழித்துக் கொள்ளத்தக்க கத்தி, கிழிந்த துணிகளைத் தைப்பதற்கான ஊசி ஆகியவை. பிக்கு தலையை முழுதும் முண்டனம் செய்து முகத்தையும் மழித்துக் கொள்வது வழக்கம். மடாலயத்திலுள்ள பிக்குகள் ஒருவருக் கொருவர் இந்த உதவியைச் செய்து கொள்வர். பிக்குகள் உடல் முழுவதையும் மறைத்துத் தங்கள் சீவர உடையால் போர்த்துக்கொள்வார்கள்; வலது தோள் மட்டும் திறந்திருக்கும், அவர்கள் தங்கத்தையோ, வெள்ளியையோ, பணத்தையோ தீண்டக்கூடாது.

பிக்குகள் பிட்சை எடுத்து வந்த உணவையே உண்டு வரவேண்டும். காலையிலிருந்து மதியத்திற் குள் அவர்களுடைய ஒரு வேளை உணவு முடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/189&oldid=1386885" இலிருந்து மீள்விக்கப்பட்டது