பக்கம்:பௌத்த தருமம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

பெளத்த தருமம்


பிரபுவுமான புத்தர்!’ என்று அவர் உருக்கத்தோடு கூறினார். மகாகாசியபர், புத்தர் பிரான் தருமமாகிய காயத்தோடு (உடலோடு) விளங்குகிறார் என்பதை விளக்கிச் சொன்னார். பெருமானுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், உபதேசங்களையும், வரலாறுகளையும் சங்கம் பாதுகாத்து வைத்துக்கொண்டிரா விட்டால், பிற்காலத்துச் சந்ததியார்கள் மாபெரும் முனிவராகிய சாக்கிய முனிவரைப் பற்றி எதுவும் அறிந்துகொள்ள வழியில்லாமற் போய்விடும் என்று அவர் எச்சரிக்கை செய்தார்.

அப்போது பிக்குகள் அனைவரும் பிற்காலத்துச் சந்ததியார்களுக்காகப் புத்தபகவரின் கொள்கைகளையும், தத்துவங்களையும், விதிகளையும், அவைகளில் கலப்பு ஏற்படாதபடி, புனிதமான நிலையில் முறைப்படுத்தி வைப்பதற்காக விரைவிலே இராஜகிருக நகரில் 500 பிக்குகளைப் பிரதிநிதிகளாகக் கொண்ட மகா நாட்டைக் கூட்ட வேண்டும் என்று தீர்மானித்தனர்.

முதல் மகாநாடு

அந்தத் தீர்மானத்தின்படி நான்கு மாதங்களுக்குப் பின் இராஜகிருக நகருக்கு அருகிலிருந்த ஸத்தபனி மலைக் குகையிலே பௌத்த பிக்குகளின் முதலாவது மகாநாடு கூடிற்று. மகா காசியபர் அதற்குத் தலைமை வகித்தார். மகத மன்னர் அஜாதசத்துரு அதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தார். மகா நாட்டில் ஆனந்தர் மேடைமீது ஏறி நின்று, யாவரையும் வணங்கிவிட்டுத் தாம் கேள்விப்பட்ட முறையில் புத்தர் பெருமானின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/195&oldid=1386824" இலிருந்து மீள்விக்கப்பட்டது