பக்கம்:பௌத்த தருமம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பௌத்தத் திருமுறைகள்

198


என்று பெயர். மகாயானம் என்பதற்குப் பெரிய அல்லது மேலான வாகனம் என்றும் சொல்வதுண்டு, நிருவாணப் பேற்றுக்கு அழைத்துச் செல்லும் மேலான வாகனம் மகாயானம் என்பதே கருத்து. திபேத்து, சீனா, ஜப்பான் முதலிய நாடுகளிலுள்ள பௌத்தர்கள் மகாயானத்தைச் சேர்ந்தவர்கள், மகாயான பௌத்தர்கள், தேரவாத பௌத்தா தம்முடைய தருமத்தினும் குறைந்தது, குறைபாடுள்ளது என்ற கருத்தில் அதை ஹீனயான (சிறிய அல்லது தாழ்ந்த வாகனம்) என்று குறிப்பிடுவார்கள். ஆனால் தேரவாத பௌத்தர்கள் அந்தப் பெயரை பற்றுக் கொள்வதில்லை.

தேரவாத பௌத்தமே புத்தர் பெருமானின் மூல உபதேசங்களை அப்படியே போற்றிப் பின்பற்று வருவது. மகாயான பெளத்தர்கள், புத்தர் பிரான் வெளிப்படையாக மக்களுக்குக் கூறிய செய்திகளையும் உபதேசங்களையும் மட்டுமே தேரவாதம் அடிப்படையாகக் கொண்டிருப்பதாயும், அவர் தம் அந்தரங்கம் சீடர்களான உயர்ந்த படியிலுள்ள பிக்குகளுக்குச் செய்த உபதேசங்களைத் தாங்கள் பின்பற்றுவதாயும், பெருமானின் உபதேசங்களின் உட்கருத்தை அறிந்து தாங்கள் நடந்து வருவதாயும் கூறுவர்.

மகாயானம் வேதாந்திகளுடைய அத்வைதச் கொள்கைக்கு நிகராகக் கருதப்படுவது. அதைக் கொண்டே வேதாந்தத்தை ஆதாரமாய்க் கொண்ட அத்வைதிகளை மற்ற சித்தாந்தத் தலைவர்கள் ‘பிரச்சன்ன பௌத்தர்கள்—(மறை முகமான பௌத்தர்கள்’ என்று கூறுவதுண்டு. மகாயானத்தில் சமயங்களுக்கு வேண்டிய கோட்பாடுகளும், கிரியைகளும் சேர்த்துக் கொள்ளப் பெற்றன. தத்துவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/200&oldid=1386842" இலிருந்து மீள்விக்கப்பட்டது