பக்கம்:பௌத்த தருமம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

பெளத்த தருமம்


விசாரங்களும் அதில் அதிகமுண்டு. தனித் தனியாக மனிதர்கள் முயற்சி செய்து முக்திபெற இயலாது என்றும், ஜீவராசிகள் அனைத்தையும் கருத்திற் கொண்டே ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் மகாயானம் வற்புறுத்தும். சுருக்கமாய்ச் சொன்னால், அது வேதாந்தம், இஸ்லாத்தில் ஸூபிகளின் கொள்கை, தென்னாட்டுச் சித்தர்களின் கூடமான சித்தாந்தங்கள் ஆகியவற்றைப் போன்றது எனலாம். எனவே பௌத்தம் வாழ்க்கை நெறி அல்லது தருமம் என்ற நிலை மாறி, மகாயானத்தில் அது ஒரு பூரணமான சமயமாக அமைந்துளது. சிலை வணக்கம் உட்படப் பலவித வணக்க முறைகளுக்கும் அது இடம் கொடுக்கும். அது புத்தரைத் தெய்வீக நிலைக்கு உயர்த்திக் கூறும். மொத்தத்தில் மகாயானம் மக்களின் மனத்தைக் கவரக்கூடிய பல அமிசங்களையும் தன்னுள்ளே கொண்டது.

தேரவாத பௌத்தம், ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தானே தீபமாயிருந்து, தானே இடை விடாது முக்திக்கு முயற்சிசெய்து வரவேண்டும் என்று கருதுவது. நம்பிக்கையைவிட அதற்கு ஒழுக்கமே பிரதானம்.

வெளியிலிருந்து புதுத் தத்துவங்கள் தன்னுள் கலந்துவிடக் கூடாது என்பதில் அது கண்ணும் கருத்துமாயிருந்து வருவது. புத்தர் பெருமானை அது எவ்வளவு உயர்வாகப் போற்றி வந்த போதிலும், அவரும் மனிதரே என்ற கொள்கையைப் புறக்கணிப்பதில்லை.

மகாயானத்தைப் பின்பற்றுவோரிலும் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவினர் மாத்தியமிகர், மற்றொரு பிரிவினர் யோகாசாரர். இதேபோலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/201&oldid=1386846" இலிருந்து மீள்விக்கப்பட்டது