பக்கம்:பௌத்த தருமம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பௌத்தத் திருமுறைகள்

195


தேரவாதத்தைப் பின்பற்றுவோரிலும் சௌத்திராந்திகர், வைபாஷிகர் என்ற இரு பிரிவினர் உண்டு.

மகாயானம் தேரவாதம் ஆகிய இரண்டு பெரும் பிரிவுகளைத் தவிர பௌத்த சமயத்திலே நாளடை வில் வேறு சில சிறு பிரிவுகளும்[1] ஏற்பட்டிருந்தன. முக்கியமாகப் பௌத்தக் கொள்கைகள் வெளிநாடுகளிலே பரவிய காலங்களில் ஆங்காங்கே நிலவிவந்த பழைய சமயங்களின் கொள்கைகள் சிலவும் அவைகளோடு கலந்து விடுவது இயல்பாயிருந்தது. இவ்வாறு கலப்பினால் தோன்றிய ஒன்றுதான் ஜென் பௌத்தம் என்பது. இது சீனாவிலும் ஜப்பானிலும் பிரபலமாயுள்ளது. ‘ஜென்’ என்ற ஜப்பானிய மொழிக்குத் தியானம் என்று பொருள். ஜென் பௌத்தம் தியான மார்க்கமாகும். சீனாவில் முன்பு நிலைத்திருந்த ‘டாவோ’ மதமும் மகாயான பௌத்தமும் கலந்து இது தோன்றியது என்பர். இதை முதலில் சீன தேசத்திலே போதித்தவர் போதி தருமர் என்பவர். இவர் தமிழ் நாட்டில் காஞ்சீபுரத்திலிருந்து பௌத்த மதப் பிரசாரத்திற்காக வெளி நாடுகளுக்குச் சென்றவர்.


  1. இப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர்கள் ஸர்வாஸ்திவாதிகள் , வாஸிபுத்ரியர், தரும குப்திகர், காசியபியர், மகாசங்கிகர், பகுசுருதியர், சைத்தியகர். திபேத்து, நேபாளம், சீனம், ஜப்பான் ஆகிய நாடுகளிலும் பல பிரிவினர்கள் இருக்கின்றனர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/202&oldid=1386851" இலிருந்து மீள்விக்கப்பட்டது