பக்கம்:பௌத்த தருமம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்தத் திருமுறைகள் 205 - புத்தர் அளிக்கும் மறுமொழிகள் உள்ளன. ரத்ன சூத்திரம் புத்தர், தருமம், சங்கம் ஆகிய மூன்று இரத்தினங்களின் பெருமையைக் கூறுகின்றது. தென்புலத்தாருக்குச் செய்யவேண்டிய கடமையும். தானம், நீதி, தன்னடக்கம் ஆகியவையே புதையல் தனம் என்பதும், சகல உயிர்களையும் தாயன்புடன் நேசிக்கவேண்டும் எ ன் பதும் பிற்பகுதிகளில் விளக்கப்படுகின்றன. தம்மபதம் ! புத்தர் பெருமானின் ی{| If ши உபதேசங்களை ஒரே சிறு நூலில் பார்க்க வேண்டு மென்ருல், அதற்குரியது தம்மபதம் (தருமபதம்) என்ற இந்த அறநெறியேயாகும். இதிலுள்ள உபதேசங்கள் சுருக்கமானவை, கவிதைச் சுவை பொருந்தியவை. ஆங்கில மொழியிலே, புகழ்பெற்ற மாக்ஸ்முல்லர், 'பாரத ரத்னம் ஸர் எஸ். இராதா கிருஷ்ணன் ஆகியோருடைய மொழிபெயர்ப்புக்கள் உட்பட நாற்பதுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புக்கள் இந்நூலுக்கு இருக்கின்றன. லத்தின், ஜெர்மன் பிரஞ்சு முதலிய பல ஐரோப்பிய மொழிகளிலும், இந்திய மொழிகளிலும், சீன, ஜப்பானிய, சிங்கள மொழிகளிலும் தம்மபதம் பிரபலமாக விளங்கு கின்றது. “தம்மபத'த்தில் 423 சூத்திரங்கள் 26 வக்கப் களாக அமைந்துள்ளன. இந்தச் சூத்திரங்கள். புத்தர் பிக்குகள், பிராமணர், ஞானிகள், முனிவர். சான்ருேர், பேதையர் ஆகியோர்களைப் பற்றி" அறியாமை, அவா, பற்று, கோபம், மடிமை, பொய், போலித்துறவு, காமம், பிறர் மன இச்சித்தல், கூட நட்பு, தீயொழுக்கம், தண்டனை, பொறுமை புல னடக்கம், மனத்துய்மை, கொல்லாமை, இன்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/212&oldid=849060" இலிருந்து மீள்விக்கப்பட்டது