பக்கம்:பௌத்த தருமம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

பெளத்த தருமம்


 இவர், இலங்கைக்குச் சென்று, அங்குள்ள திரிபிடகங்களையும், சிங்கள மொழியிலிருந்த அவைகளின் உரைகளையும் பயின்றுவர முற்பட்டார். இலங்கைப் பிக்குகள் இவரது தகுதியையும் புலமையையும் சோதிக்கக் கருதி, இரண்டு பாலிமொழிச் சூத்திரங்களைக் கூறி, அவைகளை விளக்கும்படி கோரினர். இரண்டு சூத்திரங்களை மட்டும் விளக்குவதற்குப் பதிலாகப் புத்தகோஷர் திரிபிடகம் அனைத்தையுமே விளக்கி ஒரே நூலாக எழுதிவிட்டார். அதுவே ‘விசுத்தி மார்க்கம்’. புத்தகோஷர் எழுதிக் குவித்த நூல்கள் பலப் பல. தீக-நிகாயம், மஜ்ஜிம-நிகாயம், சம்யுத்த-நிகாயம், அங்குத்தர-நிகாயம் ஆகிய நான்கு நிகாயங்களுக்கும் இவர் விளக்க உரை எழுதியுள்ளார். ஒரு மனிதர் தம் ஆயுளில் இத்தனை நூல்களை எப்படி எழுத முடிந்தது என்று வியப்புறும் படி இவர் தம் எண்ணற்ற நூல்களின் மூலம் பெளத்த தருமத்திற்கு ஈடில்லாத சேவை செய்திருக்கிறார். பிற்காலத்தில் இவர் கம்போடியா நாட்டில் வசித்திருந்து நிருவாணம் பெற்றதாகத் தெரிகிறது. அங்கே ‘புத்தகோஷர் விகாரை’ என்ற விகாரையும் இருக்கின்றது.

மகாயான நூல்கள்

மகாயானத் திரிபிடகங்கள் சூத்திரம், அபிதருமம், விநயம். மகாயானத் திருமுறைகளிலே 86 நூல்கள் இருந்ததாக ‘மகாவியுத்பத்தி’ நூல் கூறும்.

மகாயான நூல்கள் வடமொழியிலே யுள்ளவை. அவைகளில் ‘லலிதவிஸ்தரம்’, ‘சத்தரும புண்டரிகம்’,' ‘இலங்காவதாரம்’, ‘புத்த சரிதை’ முதலியவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/221&oldid=1386829" இலிருந்து மீள்விக்கப்பட்டது