பக்கம்:பௌத்த தருமம்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்தத் திருமுறைகள்

215


 மிகவும் முக்கியமானவையாகக் கொண்டாடப் பெறு கின்றன.

இவற்றுள் ‘லலிதவிஸ்தரம்’ மகாயானத்திற்கு ஆதார நூலாகக் கொள்ளப் பெறுகின்றது. இதில் புத்தர் பெருமானின் வாழ்க்கை வரலாற்றில் பெரும் பகுதி உள்ளது. பாட்டும் வசனமும் கலந்துள்ள இவ்வரலாறு படிக்க இனிமையாயும், பக்திச்சுவை நிறைந்ததாயும் அமைந்துள்ளது. பெருமானைப் பற்றி ஒரளவாவது தெரிந்து கொள்ளத்தக்க ஐந்து வரலாற்று நூல்களுள் இது சிறப்புடையது. இதன் விவரங்களை அநுசரித்துப் பிற்காலத்தில் ஜாவா தீவிலுள்ள போரோ.புதுார் பெளத்த ஆலயத்தில் சிலை களும் சிற்பங்களும் செய்து வைக்கப் பெற்றுள்ளன.

‘சத்தரும புண்டரிகம்’ மகாயான பெளத்தத்தை விளக்கும் ஆதி நூல்களுள் மிக முக்கியமானது. சீன மொழியில் இதற்கு 8 அல்லது 9 மொழி பெயர்ப்புக்கள் இருந்தனவாம்; இப்போது மூன்று மட்டுமே அகப்பட்டிருக்கின்றன. சீனாவிலும், ஜப்பானிலுமுள்ள சில பெளத்த சமயப் பிரிவினர்களுக்கு இதுவே ஆதார கிரந்தமாக அமைந்திருக்கின்றது. தியான மார்க்கத்தைப் பின்பற்றும் ஜென் பெளத்தப் பிரிவைச் சேர்ந்த ஆலயங்களில் இது தினந்தோறும் ஒதப்படும். தேரவாத பெளத்தம் சாதாரண அறிவுள்ள பொது மக்களுக்காகப் புத்தரால் உபதேசிக்கப் பெற்றது என்றும்,முழு உண்மையும் அதில் விளக்கப்பெறவில்லை என்றும், அதன் மூலம் அடையக்கூடிய நிருவாணம் வெறும் ஒய்வு பெறும் தலந்தான் என்றும், புத்தர்கள் கையாளும் ஸம்யக் - ஸம்போதி மார்க்கத்தின் படி, எல்லாப் பொருள்களையும் சமதிருஷ்டியுடன் சமமாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/222&oldid=1386810" இலிருந்து மீள்விக்கப்பட்டது