பக்கம்:பௌத்த தருமம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

பெளத்த தருமம்





பார்க்கும் முறையில் முடிவான ‘நிர் - விருத்தி’ என்ற சாந்தி கிடைக்குமென்றும் இந்நூலுள் விரிவாக விளக்கப்பெற்றிருக்கின்றது.

அசுவகோஷர் இயற்றிய “புத்த சரிதை” ஓர் அமர காவியம். கவிஞரும் தத்துவ ஞானியுமான இவ்வாசிரியர் மகாகவி காளிதாஸனுக்கும் பாஸ னுக்கும் வழிகாட்டியாக விளங்கியவர். இவர் காலத்திற்கு 2 அல்லது 3 நூற்றாண்டுகட்கு முன்பே மகாயான .பௌத்தம் பரவியிருந்த போதிலும், இவருடைய காவியத்திலே அது விளக்கம் பெற்றது. ‘புத்த சரிதை’ பல மொழிகளில் பெயர்க்கப் பெற்றுளது. சீன மொழிபெயர்ப்பில் இக்காவியம் 28 படலங்கள் கொண்டுளது ; ஆனால் நம் நாட்டிலுள்ள வடமொழி மூல காவியத்தில் 17 படலங்களே அகப்பட்டுள்ளன. “அசுவகோஷர் சாரீபுத்திரப் பிரகரணம்” போன்ற சில நாடகங்களையும் இயற்றியுள்ளார்.

‘இலங்காவதாரம்’ ' விஞ்ஞான வாதத்தை விளக்கும் நூல். மேலே குறித்தவைகளைத் தவிர அவதானங்கள், அலங்காரங்கள், தோத்திரங்கள், காதைகள், மகாத்மியங்கள், தாரணிகள், தந்திரங்கள் முதலிய மகாயானச் சார்பான நூல்கள் பிற்காலத்தில் எண்ணற்றவையாகப் பெருகிவிட்டன.

நவீன வெளியீடுகளும் ஆராய்ச்சிகளும்

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்வரை ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் பாலி மொழியிலுள்ள பெளத்த இலக்கியங்களைப் பற்றிய விவரம் எதுவும் தெரியாமலிருந்தது. வடமொழி மூலத்திலிருந்து சீன, ஜப்பான் நாடுகளில் மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/223&oldid=1386803" இலிருந்து மீள்விக்கப்பட்டது