பக்கம்:பௌத்த தருமம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்கு வாய்மைகள்

27


ளெல்லாம் கிடைப்பினும், பின்னும் வேறு பல தேவைகள் தோன்றுகின்றன. இவ்வாறு அவன் தன் வேட்கைக்கு-ஆசைக்கு-அவாவுக்கு-அடிமைப் பட்டே கிடக்கிறான். அவன் நாடிய இன்பங்க ளெல்லாம் துன்பங்களாக முடிகின்றன.

துன்பத்திலெல்லாம் பெருந் துன்பத்திற்குக் காரணமாயுள்ளது நிலையற்ற வாழ்வை அவன் நிலையானதென்று கருதுவதுதான். திடீரென்று மரணமும் நேருகின்றது; அப்பொழுதுகூட அவனுடைய 'நான்' என்ற ஆணவம் போவதில்லை.

உலகிலே பெரும்பாலான மக்கள் பசியாலும் பயத்தாலும் எப்பொழுதுமே வாடி வதங்குவதைப் பாக்கிறோம். வைத்தியசாலைகளிலும், சிறைச்சாலைகளிலும், அநாதை விடுதிகளிலும் மக்கள் படும் அவதிகளைக் கண்டால், உலகின் துக்கம் எத்தகயைது என்பதை ஓரளவு உணரலாம். போர்க்களங்களிலே அரிந்து தள்ளப்பெறும மக்களையும், இரத்த ஆறுகள் ஒடுவதையும் பார்த்தல் இன்பக் காட்சியன்று. மொத்தத்தில் செல்வர், வறியோர், யாவருடைய வாழ்விலும் துக்கமே செறிந்து விளங்குகின்றது.

தனி மனிதர்கள் 'நான்' 'எனது' என்று கொள்ளும் அகங்கார மமகாரங்களினாலேயே, அவர்களுக்கும் மக்கள் சமுதாயத்திற்கும் பெருங் கேடு விளைவிக்கிறார்கள். சுயநலத்தால் அவர்கள் தேடிச் சேர்க்கும் பொருள் எதுவும் முடிவில் அவர்களோடு செல்வதில்லை. ஆயினும் அவர்கள் இந்தச் கயநலத்தையே அடிப்படையாகக் கொண்டு, இரவும், பகலும், வெறிபிடித்தது போல் உழைத்து வருகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/30&oldid=1387117" இலிருந்து மீள்விக்கப்பட்டது