பக்கம்:பௌத்த தருமம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பெளத்த தருமம்


மனிதனின் அவாவுக்கு அடிப்படையாயுள்ளது ‘நான்’ என்ற அகம் —ஆணவம். ஒவ்வொரு மனிதனும் தன் நலம் வேறு, சமுதாயம் வேறு என்று கருதுகிறான். ‘நான்’ என்பது நிலையான ஒன்றா? உண்மையில் ‘நான்’ என்பதே இல்லை என்று உபதேசித்தார் புத்தர் பெருமான். உலக முறையில் ஒருவரிலிருந்து மற்றவர்களை வேற்றுமைப்படுத்தித் தெரிந்துகொள்ள ‘நான்’ ‘நீ’ என்று கூறிக்கொள்வதைத் தவிர, ‘நான்’ என்பது உண்மையற்ற ஒரு தோற்றமேயாம்.

மனிதன் உருவு, நுகர்ச்சி, குறி, பாவனை, உள்ள அறிவு ஆகிய ஐவகைக் கந்தங்களின் சேர்க்கையால் தோன்றியவன். நாமமும் உருவமும் பெற்று விளங்கும்போது, அவன் ‘நான்’ என்ற அகங்காரத்தை மேற்கொள்கிறான். பொறிகளாலும், புலன்களாலும் அவன் பெறும் அநுபவங்களை யெல்லாம் இந்த ‘நான்’ என்ற அகங்காரத்திற்கே அவன் அர்ப்பணித்து வருகிறான். ‘நான்’ என்று சொல்லத்தக்க மாறாத, அழியாத, ஒரு பொருள் அவனுள்ளே தனித்து நிலைபெற்றிருக்கிறதா? உடல் மாறும் போதெல்லாம் அவனுடைய ‘நானும்’ மாறிக்கொண்டேயிருக்கின்றது; உடல் அழியும் போது ‘நானும்’ மாண்டு போகின்றது. ஒரு தேரைப் பிரித்துப் பலகைகள், சக்கரங்களை யெல்லாம் வேறு வேறாக அடுக்கி வைத்து விட்டால், அந்தக் குவியலை யாரும் தேர் என்று சொல்லமாட்டார். இதைப்போலவேதான் மனிதன் நிலையும். நாம ரூபங்களை வைத்தே அவன் தன்னுள் நிலையான ‘நான்’ என்ற அகம் தங்கியிருப்பதாக எண்ணுகிறான்.

பனிதனின் உடலில் ஒவ்வொரு கணத்திலும் கோடிக்கணக்கான உயிர் அணுக்கள் மடிந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/31&oldid=1386778" இலிருந்து மீள்விக்கப்பட்டது