பக்கம்:பௌத்த தருமம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பெளத்த தருமம்


 உறங்கல் எல்லாவற்றிலும் ஆடம்பரத்தை ஒழிப்பதால் எளிய வாழ்வு அமைகின்றது; விலை மதிப்புள்ள பொருள்களை மறுத்தல் எல்லா ஆசைகளையும் களைந்தெறிய உதவுகின்றது: சிற்றின்பத்தைத் துறத்தலால், உடலின் ஆற்றலையும் மன வலிமையையும் ஒரே குறிக்கோளாகிய நிருவாணத்தை அடைவதற்கு எவ்விதத் தடையுமின்றிப் பயன்படுத்த முடிகின்றது.

சீலங்களைக் கண்ணும் கருத்துமாய்ப் பேணி வருவதோடு, ஒருவன் தியான முறைகளில் பயிற்சி பெறவேண்டும். தனியிடத்தில் இருந்துகொண்டு, சிந்தையை ஒருநிலைப்படுத்திச் சமாதியில் நிலைத்து நின்று பழகவேண்டும். அந்நிலையிலே உடல், உலகம், வாழ்வு, மரணம் முதலியவைகளையும், பற்றிச் சிந்தித்து, விலக்கவேண்டியவைகளை விலக்கியும், கொள்ள வேண்டியவைகளைக் கொண்டும் பழகிவந்தால், ஆறு புலன்களினால் உண்டாகும் ஆசைகளையும், பற்று, பகை, கோபம், மறதி, சந்தேகம் முதலியவற்றையும் அறவே களைந்துவிட மிகவும் உதவியாகும். உள்ளப் பண்பாட்டிற்கும், உபசாந்திக்கும் தியானம் அல்லது சமாதியே உறு துணையாகும். பெளத்த தருமத்தில் நால்வகைத் தியானங்கள் குறிக்கப் பெற்றுள்ளன.

வயலை உழுது பயிரிட்டு, எருவிட்டு, நீர் பாய்ச்சி களை பறித்து, அல்லும் பகலும் அதனைக் காத்து வருதலைப போலச் சமய வாழ்வும் ஒருவகை விவசாயமே. பின்னதில் நிலமாக விளங்குவது மனம் அல்லது உள்ளம். மனத்தில் ஏற்படும் விகாரங்களைக் கணக்கிட முடியாது. கணந்தோறும் மனம் மாறிக்கொண்டே யிருக்கும். ஆசைகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/39&oldid=1387142" இலிருந்து மீள்விக்கப்பட்டது