பக்கம்:பௌத்த தருமம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

பெளத்த தருமம்


வகைத் தியானம் என்பது தெரிய வரும்-அதாவது மனத்தை ஒருநிலைப்படுத்தி விஷயங்களில் பயிற்சி பெறுதலாகும். மனிதனுக்குக் கிடைத்துள்ள இந்த ஆற்றலை அவன் முழுதும் பயன்படுத்திக் கொள்வதில்லை. அவன் ஒரு விஷயத்தைக் கருத்திலே பதிய வைத்துக் கொண்டிருக்கும்பொழுது, அதற்கு எதிரான வேறொரு விஷயம் முளைக்க ஆரம்பிக்கின்றது. முதல் விஷயத்திற்குச் செலவாகும் சக்தியை எதிரிடையான விஷயம் விணாக்கி விடுகின்றது. அம்மனிதன் மனவுறுதியற்றவனாகிறான். கட்டிடம் கட்டுபவன் ஒரு கையால் கட்டுவதை மறு கையால் அழித்துக்கொண்டு வந்தால் என்ன பயனுண்டு? அந்தப் பயன்தான் மனவுறுதியற்றவனுக்கும்.

ஆகவே சித்தம் தவறாமல், ஒரே உறுதியுடன் இருக்கப் பழக வேண்டும். தீய எண்ணங்கள் தோன்றுகையில், அவைகளுக்கு நேர் எதிரான நல்லெண்ணங்களைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். இவ்வாறு பழகி வந்தால் தீயவை அருகி வந்து ஒழிந்து விடக்கூடும. பின் மனத்தின் ஆற்றல் வீணாகாதபடி நல்லெண்ணங்களையே போற்றி வளர்த்து வரமுடியும். மனிதனின் உறுப்புக்கள் யாவும் பழக்கததிறகு அடிமைப்பட்டவை. அவன் மனமும் அவ்வாறேயுள்ளது. தீய கருத்துக்களை வேரோடு பறித்துவிட்டு, நற்கருத்துக்களையே சிந்தித்து வரப் பழகினால், நாளடைவில் நற்கருத்துக்கள் சிரமமில்லாமலே நிலைத்து நிற்கக் கூடியவை. முதலில் உலகப் பொருள்கள், நம் இயல்புகள் பற்றிச் சிந்தித்து, அவைகளின் உண்மையான தன்மைகளை அறிந்து கொண்டால், அவைகளிலிருந்து நற்கருத்துக்களைப் பற்றிச் சிந்தித்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/45&oldid=1387079" இலிருந்து மீள்விக்கப்பட்டது