பக்கம்:பௌத்த தருமம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு வாய்மைகள் 45. யிருக்கிறது என்பது மிகவும் விசேஷமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில நாட்டுப் பேரறிஞர் காலஞ் சென்ற திரு. எச். ஜி. வெல் ஸாம் புத்தருடைய உபதேசத்தைப் பாராட்டியுள்ளார் : கெளதமருடைய அடிப்படை யான உபதேசம் தெளிவாயும் எளிதாயுமுள்ளது, நவீன காலத்துக் கருத்துக்களோடு மிக அதிகமான ஒற்றுமையுடையது. உலகம் இதுவரை அறிந்துள்ள அறிவாளர்களிலே, தலைசிறந்த, ஆழ்ந்த அறிவுள்ள ஒருவருடைய பெரிய சாதனையே அது என்பதில் கருத்து வேற்றுமையே இருக்க முடியாது." புத்தர் பெருமானின் உபதேசப்படி உள்ளத்தில் தோன்றும் திய எண்ணங்களை அகற்றவும், நல்ல எண்ணங்களை வ ள ர் க் க வு ம் , எப்பொழுதும் உள்ளத்தைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ளவும் பல நாள், பல ஆண்டுகள் பயிற்சி வேண்டும். அந்தப் பயிற்சிக்குரிய திட்டத்தையும் அவரே வகுத்துள்ளார். அதில் மிக மிக முக்கியமானது அஷ்டாங்க மார்க்கம். அம்மார்க்கம் வாழ்க் ைக முழுவதையுமே அளாவி நிற்பது, அத்துடன் மற்ற t “It is remarkable how near this philosophy of the Buddha brings us to some of the concepts of modern physics and modern pmflesopinic tnought.' – ‘Discovery of India' — Jawaharlal Nchru

    • The fundamental teaching of Gauthama is clear and simpoc and in the closcst harmony with modern ideasIt is beyond all disp ite the achievement of one of the most penetrating intelligences the world has ever known-":

- The Our Ione of History’-H. G. Wells

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/48&oldid=849153" இலிருந்து மீள்விக்கப்பட்டது