பக்கம்:பௌத்த தருமம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

பெளத்த தருமம்


உயிரும் தனக்குள்ளே சொல்லிக் கொள்வதில்லை. ஒப்பற்ற பகுத்தறிவை உபயோகித்துக் கொண்டு பார்ப்பதே மனிதனுடைய காட்சி அல்லது பார்வை. இந்தப் பார்வையே கோளாறா யிருந்தால், பார்க்கப்படும் பொருளின் தன்மையும் மாறுபாடாகவே தோன்றும். தவறான காட்சி அல்லது பார்வையே எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படையாக அமைகின்றது. ஏனெனில் அதனால் தவறான நம்பிக்கைகள், கொள்கைகள், இலட்சியங்கள் ஏற்படுகின்றன. மானிட சரித்திரத்தின் போக்கு மனிதன் கொண்ட நம்பிக்கைகள், கொள்கைகளின் போக்காகும். அவனுடைய செய்கைகள் பெரும்பாலும் இந்த நம்பிக்கைகளையே ஆதாரமாய்க் கொண்டவை. தவறான பார்வையுள்ளவன் பகுத்தறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்த மில்லாத விஷயங்களிலெல்லாம் நம்பிக்கை கொள்ளக்கூடும். இதனாலேயே மூட நம்பிக்கைகள் முதிர்ந்து வளர்கின்றன, ஆராய்ச்சி அவமதித்து ஒதுக்கப்படுகின்றது.

பொருள்களின் உண்மையான இயல்பை அறிவதே நற்காட்சி. அதுவே அறிவு பெற்றிருப்பதன் பயன:

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. [1]

ஒவ்வொரு செயலுக்கும் காரணமாவது நோக்கம் அல்லது இலட்சியம். நோக்கத்திற்குத் தூண்டு கோலாக விளங்குபவை நம்பிக்கையும் கொள்கையும். ஆதலால்தான் காட்சி நற்காட்சியா யிருக்க வேண்டும் என்று கூறப்பெற்றுள்ளது. நற்காட்சி


  1. ‘திருக்குறள்’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/55&oldid=1386928" இலிருந்து மீள்விக்கப்பட்டது