பக்கம்:பௌத்த தருமம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஷ்டாங்க மார்க்கம்

55


மொழிபெயர்க்கப்பட் டிருக்கின்றது. இவை எல்லாமுமே ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்றொடர்கள். நல்லூற்றம் நற்காட்சியோடு இணைப்புள்ளது. இவை இரண்டும் சேர்ந்து நிருவாண நிலைக்குரிய ‘பிரஞ்ளுை’ என்ற மெய்யறிவை அளிக்க வல்லவை. எனவே சத்தியத்தை நாடிச் செல்பவன், மகான்கள் என்றும், மகரிஷிகள் என்றும், எவரெவர்களோ, எவ்வெக் காலத்திலோ சொல்லி வைத்தவைகள் யாவும் உண்மையென்று நம்பிக் கொண்டிராமல், தானாக முயன்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். அறிவுக்குப் பொருத்தமில்லாதவைகளை உதறிவிட வேண்டும். கல்வி கேள்விகளில் சிரத்தை கொண்டு, உலகியல் அறிவுகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். விருப்பு வெறுப்புக்கள், கோபம், அச்சம், மடமை ஆகியவைகளை விலக்க வேண்டும். மதவாதிகளின் முடிவில்லாத தத்துவங்கள், விவாதங்கள், மனப் பண்பாட்டுக்கு இடையூறான ஏனைய விஷயங்கள் யாவற்றிலும் சிறிதும் தலையிடாது ஒதுங்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகத் தான் மேற்கொண்டுள்ள இலட்சியத்தை மறவாமல், அதை அடைவதற்குரிய மார்க்கத்தினின்றும் சிறிதும் விலகாமல், வேறு சிந்தனைகளுக்கோ ஆராய்ச்சிகளுக்கோ இடங்கொடாமல் இருந்து வரவேண்டும். மானிட அறிவுக்கும் ஆற்றலுக்கும் மேற்பட்டு, மனிதனால் யூகித்துக்கூட அறிய முடியாத ஜீவான்மா, பரமான்மா போன்ற விஷயங்களிலும், உலகிலே மலைமலையாக விளங்கும் சொற்குவியல்களான சாத்திரங்களின் ஆராய்ச்சியிலும் அவன் ஈடுபடுதல் ஒருகாலும் நன்மை யளிப்பதில்லை; அது அவன் முன்னேற்றத்திற்குப் பெருந் தடையுமாகும். வில், வாள், வேல் முதலிய கொலைக் கருவிகளோடும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/60&oldid=1386968" இலிருந்து மீள்விக்கப்பட்டது