பக்கம்:பௌத்த தருமம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

இவை அனைத்திலிருந்தும் பெளத்த தருமம் மாறுபட்டது. அதில், இறைவனுமில்லை, ஆன்மாவுமில்லை - எனினும் அது வெறும் நாத்திகமன்று. பிரபஞ்ச இயல்புக்கு மேலான ஒரு பதம் - துக்கமில்லாத சாந்தி நிலையம் - நிருவாணம் - இருப்பதாக அது கூறுகின்றது. ‘நானே பிருமம்’ என்ற நிலையை ஜீவான்மா அடையக்கூடிய நிலையைப் போதிக்கும் வேதாந்த அத்வைதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாகத் தோன்றும் பெளத்த தருமம் அத்வைதமும் அன்று. சரீரத்துள் இருந்து கொண்டே, அதனோடு ஒட்டாமல், பார்ப்பவனாயும், கேட்பவனாயும், அநுபவிப்பவனாயும் ‘ஆத்மன்’ விளங்குகிறான் என்றால், ‘அந்த ஆத்மன் செவிகளால் பார்க்க முடியுமா? கண்களால் கேட்க முடியுமா?’ என்று பிற்காலத்துப் பெளத்த ஆசாரியர் நாகசேனர் கேள்வியை எழுப்பினார். சருவவல்லமையுள்ள ஆன்மா செவிகளில்லாமலே கேட்கவும், கண்களில்லாமலே காணவும் சக்தி பெற்றிருக்க வேண்டுமல்லவா? ஆகவே, பெளத்த தருமத்தைப் பற்றி அவசரப்பட்டு முடிவுகளைச் சொல்லாமல், ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியமாகும். ஆராய்ச்சி முடிவுகளில் கருத்து வேற்றுமைகள் இருப்பதும் இயல்பே.

ஆனால் பொதுவாகப் புத்தர் போதித்த ஒரு பேருண்மையை நாம் நினைவிலிறுத்திக் கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் தமது சொந்த முயற்சியாலேயே (தூக்கத்திலிருந்து) விடுதலை பெற வேண்டும். மரணத் தருவாயில் அவர் செய்த இறுதி உபதேசம் : ‘உங்களுடைய விமோசனத்திற்காக இடைவிடாமல் கருத்தோடு உழையுங்கள்!’

இன்றைய உலகில் அன்பும் அருளும் அருகி, வெறுப்பும் பாகையுமே செறிந்து வளர்ந்துள்ளன. அணுகுண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/7&oldid=1386962" இலிருந்து மீள்விக்கப்பட்டது