பக்கம்:பௌத்த தருமம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பெளத்த தருமம் இன்பக் காட்சிகளையும், விசித்திரங்களையும் ம் தினந்தோறும் பார்க்கிருேம். மேலே வான க்கை நிமிர்ந்து பார்த்தால், சூரியன், சந்திரன், நட்சத் திரங்கள் முதலியவை மிகவும் அற்புதமாக விளங்கு கின்றன. ஆளுல் நம் தி ன ச ரி வாழ்க்கையின் வேகத்தில், நாம் எதையும் நின்று நிதானமாகச் சிந்தித்துப் பார்க்கவே நேரம் கிடைப்பதில்?ல. சிந்தனை செய்து பார்த்தால்தானே உண்மைகள் புலகை முடியும் ! அதற்குத்தான் மக்களுக்கு நேர மில்லை. ஆளுல் அறவழியில் பல படிகளைத் தாண்டி, நல்ல நெறியிலே தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஒருவனுக்குத் தியானத்தில் அமர்ந்து, பரிபூரணப் பக்குவத்தை அடையப் .ே பா தி ய நேரமுண்டு. ஏனெனில் அவனுக்கு அதைத் தவிர வேறு வே?ல யில்லை. அவன் கூட்டத்தோடு சேர்ந்து கும்மாள மடிப்பவனல்லன்; அவன் சி ந் த னை ய | ள ன் , செயலாளன், கருத்துடையவன், துக்கத்தை நீக்க உறுதி கொண்டவன். உயிர்க்கொலை புரிவோருக்கும், சிலங்களைப் பேணுதவர்களுக்கும், புலன்களின் இன்பங்களிலே ஆழ்ந்தவர்களுக்கும் ஏற்பட்டதன்று தியானம். அவா, வெறுப்பு, மயக்கம், கர்வம், பொய்க்காட்சி ஆகிய தளைகளைக் கடந்து மேலேறியவர்களுக்கே அது உகந்தது. புலன்களின் ஆசைகள், துவேவும், சோர்வு, பரபரப்பு, சந்தேகங்கள் முதலியவற்றை அறவே நீக்கிவிட்டு, அவற்றிற்குப் பதிலாகப் பரி சுத்தம், அன்பு, உள்ளத்தின் விழிப்பு, தெளிவு, அறிவை ஆதாரமாய்க் கொண்ட நம்பிக்கை ஆகிய வற்றைப் பெறவேண்டும். அதன் பின்னரே தியானம் அல்லது சமாதி எளிதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/77&oldid=849207" இலிருந்து மீள்விக்கப்பட்டது