பக்கம்:பௌத்த தருமம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

பௌத்த தருமம்


முதலிய சாதனைகளை நிறைவேற்றிச் சமாதியை அடைகிறவரை மனம் சலனமடைந்திருக்கலாம். ஆனால் சமாதி நிலையில் மோனம் வந்துவிடும். இதனால் மெய்யறிவும், நிருவாண இன்பமும் எளிதாகின்றன. நிருவாணத்திற்குப் பின் பிறப்பில்லை, அதனால் வரும் பிணியுமில்லை. அதனால் தான் அஷ்டாங்க மார்க்கத்தைப் பற்றிப் புத்தர் பிரான், ‘பிக்குகளே, இதுவே துக்க நிவாரண மார்க்கம் என்ற ஆரிய வாய்மை என்று அழைக்கப்படுவது’ என்று கூறியுள்ளார்.

இனி நிருவாண வழிக்குரிய மற்றத் தத்துவங்களைப்பற்றிக் கவனிப்போம்.

ஸதிப் பிரஸ்தானங்கள்

இவை உடல், புலன்களின் உணர்ச்சிகள், மனம், நிருவாணம் ஆகியவை சம்பந்தமான மனோதத்துவ உண்மைகளாம். ஸதிப் பிரஸ்தானங்கள் நான்கு:

1. காயானுபாஸனை: தலை உரோமம் முதல் என்பு, தசை, தோல் முதலிய உடலின் 32-பருதிகளையும் பிரித்துப் பரிசீலனை செய்து பார்த்து, உடம்பு அசுத்தமென்று அறிய இது உதவுகின்றது.

2. வேதனானுபாஸனை: ஆறு பொறிகளின் மூலம் பெறும் உணர்ச்சிகளில் இன்பமானவை, துன்பமானவை, இரண்டுமற்றவை என்று பாகுபடுத்தி, அவற்றால் விளையும் கேடுகளை அறிய இது உதவும்.

3. சித்தானுபாஸனை: உள்ளத்திலே எழும் சிந்தனைகளைப் பிரித்துப் பரிசீலனை செய்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/81&oldid=1386982" இலிருந்து மீள்விக்கப்பட்டது