பக்கம்:பௌத்த தருமம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

பௌத்த தருமம்


உண்டாக்குவது; வீரியம் என்பது குறித்த நோக்கத்தை அடைவதற்குரிய இடைவிடா முயற்சி; சித்தம் என்பது இழிவான தீய சிந்தனைகளை விலக்கி, உள்ளம் பரிசுத்தமாயிருக்கும் நிலை, மீமாம்சை என்பது உண்மையை நாடி எல்லா விஷயங்களையும் பிரித்துப் பிரித்துப் பரிசீலனை செய்யும் ஆராய்ச்சியாகும்.

இந்திரியங்கள்

இந்திரியங்களாகிய மன ஆற்றல்கள் ஐந்து. இவை சிரத்தை, வீரியம், ஸதி, சமாதி, பிரஞ்ஞை என்பவை. [1]

சிரத்தை என்பது நம்பிக்கை, நம்பிக்கையின் மூலமே மனவலிமையைப் பெருக்கிக்கொள்ள முடியும். எல்லையற்ற மெய்ஞ்ஞானம் பெற்ற புத்தர் பெருமானிடம் நம்பிக்கை, சத்தியத்தின் ஆற்றலில் நம்பிக்கை, அருகத்துகளின் பூரணமான புனிதத் தன்மையில் நம்பிக்கை ஆகியவற்றுடன், ஒருவன் தன் ஒழுக்கத்தின் தூய்மையிலும், தானத்திலும் நம்பிக்கை வைத்தல் சிரத்தை எனப்படும்.

வீரியம்; அருகத்து நிலையை அடைய இடை விடாது முயற்சி செய்வது வீரியம்.

ஸதி: அஷ்டாங்க மார்க்க விவரத்தில் நற்கடைப்பிடி (ஸம்மா ஸதி) என்ற தலைப்பின் கீழே குறிப்பிட்டுள்ளதே இதற்கும் பொருந்தும். அத்துடன்,


  1. இந்திரியங்கள் - Psychical powers: faith, strenuous effort, retentivememory, concentration, supreme wisdom.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/83&oldid=1386974" இலிருந்து மீள்விக்கப்பட்டது