பக்கம்:பௌத்த தருமம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஷ்டாங்க மார்க்கம்

81


உடல், உணவு, உடை எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். இந்த முறைகளில் தரும விசாரப் போத்தியாங்கத்தை அபிவிருத்தி செய்து வரவேண்டும்.

3. வீரியம்: வீரியம் என்பதே இடைவிடாத முயற்சியைக் குறிக்கும். இலட்சியத்தை அடைவதற்குக் கலக்கமில்லாத தைரியமும் உறுதியும் வேண்டும். இந்தப் போத்தியாங்கத்தை நன்கு பயிற்சி செய்வதற்கு, நற்குலத்திலே பிறந்த, நற்குணமுள்ள இளைஞர்கள் மிகவும் தகுதியுள்ளவர்கள் என்றும், அரசகுலத்திலே பிறந்து பூரணஞானம் பெற்ற போதி வேந்தரான புத்தர் பெருமானுடைய புனித நினைவுக்குப்பங்கம் வராமல் அவர் அடியார்கள் நடந்து வரவேண்டும் என்றும் தர்மபாலர் குறிப்பிட்டுள்ளார்.[1] புனிதமான முயற்சியின் பெரும் பயனைச் சோம்பேறிகள் உணர முடியாது.

4. ஆனந்தம்: புத்தரையும், அவருடைய புகழ் பெற்ற அடியார்களான அருகத்துகளையும் பற்றிச் சிந்தனை செய்து வருதல் மனம் பக்குவமடைய உதவியாகும். பெருமான் வகுத்துள்ள பத்துச் சீலங்களையும் மேற்கொண்டு முறையாக நிறைவேற்றுவதிலும், தீவினைகள் பத்தையும் விலக்குவதிலும், அஷ்டாங்க மார்க்கத்தில் கூறியபடி நியாயமான வழியில் வாழ்க்கை நடத்துதல் முதலிய நியமங்களைக் கடைப்பிடிப்பதிலும் சிரத்தை கொண்டால், உள்ளம் தானாகவே ஆனந்தமடையும். இந்த அநுபவத்தைப் பெறுவதற்கேற்ற குளிர்ச்சியான சோலை முதலிய இடங்களிலே வசித்துவர


  1. ‘The Psychology of Progress’ by Anagarika Dharmapala.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/86&oldid=1386934" இலிருந்து மீள்விக்கப்பட்டது