பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 A மகளிர் வள்ர்த்த தமிழ் வாழ்ந்த மகளிராவர். அக்கால எல்லையில் ஆயிரக்கணக் கான பெண்கள் வாழ்ந்திருத்தல் கூடும். எனினும், அவர்கள் அனைவரும் இன்று, பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய் விட்டார்கள். ஏன் ? காலம் என்னும் பெருமணற்பரப்பில் தம்முடைய காலடிகளைப் பதித்து வைக்கக் கூடிய செயல் ஒன்றையும் அவர்கள் செய்யவில்லை. ஆனால், மேலே கூறிய சில பெண்களை மட்டும் காலதேவன் கூட ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆம் அவர்கள் பாடிய பாடல்கள் மூலம் என்றும் வாழக் கூடிய சிரஞ்சீவித்துவம் பெற்றுவிட்டார்கள். அப்பாடல்கள் மூலம் அவர்கள் இரண்டு பெரிய பயன் களைப் பெற்றுவிட்டார்கள். தமிழ் இலக்கியம் நல்ல கவிதைகளைப் பெற்று வளர வழி செய்தார்கள் ; இலக்கி யத்தை வளர்த்த பெருமையால் தாங்களும் நிலைபெற்று விட்டார்கள் ; நிலைபேறு இல்லாத இவ்வுலகில் நில்ைத்து விட்டார்கள். . . o o 'மின்னா உலகத்து மன்னுதல் குறித்தோர். தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தேைர " (புறம். 165) இப்பாடலுக்கு இல்க்கியம்ான ம்களிர் எத்தனை பேர் அவர்கள் பாடியுள்ள எண்ணற்ற பாடல்களுள் சிலவற்றைக் காண்போம் : - -

  • - 事 肃

பாரி வள்ளல் ஒரு சிற்றரசன் ; மிகச் சிறிய பறம்பு நாட்டை ஆட்சி செய்தவன். அவனுக்கு இரண்டு புதல்வியர் இருந்தனர். பாரியின் நண்பராய் வாய்த்தார் கபிலர் என்னும் புலவர் பெருமான். பழந்தமிழ் இலக்கிய உலகின் சக்கரவர்த்தியார் கபிலர். அத்தகைய புலவரிடம் கற்றுத் தேர்ந்தனர் பாரி மகளிர் இருவரும். பாரி, யார் எதனைக் கேட்டாலும் வாரி வழங்கும் காரணத்தால், வள்ளல் என்ற பட்டப் பெயரைப் பெற்றான். மனிதர்களைப் பாடாத சுந்தரமூர்த்தி,