பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. A மகளிர் வளர்த்த தமிழ் பெற்ற வெற்றிகள் பற்றியும் யாரிடமேனும் கூறிக்கொண் டானா ? அதுதானே இல்லை ! - வந்தவன் யார் என்று அறியாமலே போர் தொடங்கி விட்டது. கிராமத்தார் சற்றும் எதிர்பாராத வகையில் போர் நடைபெறுகிறது. சில விநாடிகளில் போர் முடிந்து விடும் என்று கருதினர் ஊரவர். ஊர் பெயர் அறியப்படாத புதிய வீரனைத் தம்முடைய ஊர் வீரன் சில விநாடிகளில் வென்று விடுவான் என்றே கருதி, வேடிக்கை பார்த்தனர் ஊரார். ஆனால், நடந்தது யாது ? சில விநாடிகள், சில நிமிடங்களாகி, இன்னும் நீள்கிறது. வெற்றி தோல்வி அறியப்படாத முறையில் போராட்டம் நடைபெறுகிறது. இறுதியில், வந்த வீரன் உள்ளுர் வீரனை வீழ்த்தப் போகும் சமயம், தன்னுடைய ஊரில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் தம் கண் எதிரே பெரு வீரனாய் வாழ்ந்த ஒருவன், தம்மவருள் ஒருவனாகக் கருதப் பெற்ற ஒருவன், வீழ்ந்துவிடப் போகிறான் என்பதை அறிந்த உள்ளுரார் சிலர், அவனைத் தாங்க ஆரம்பித்தனர் ; அவனுக்குத் தான் வெற்றி என்று பெருங் கூப்பாடு போட ஆரம் பித்தனர். நக்கண்ணையார் ஊரில் நடைபெற்ற மற்போரிலும் மக்கள் கூடி ஆரவாரித்தனர். சிலர் உள்ளுர் வீரன் பக்கம் சேர்ந்து கொண்டு, வெற்றி ! வெற்றி !’ என்று கூறினர் : கூப்பாடு போட்டனர். ம ற் று ம் சிலர், புதியவனாய் வந்த வீரன் பக்கம் சேர்ந்து கொண்டு, அவனுக்கே வெற்றி வெற்றி !' என்று கூப்பாடு இட்டனர். ஊர் இரண்டாய் பிரிந்து விட்டது. இரு சாராரும் தம் வீரனுக்கு வெற்றி என்று பெருங்குரல் எடுத்துக் கூவினர். போர் குழப்பத்தில் முடிந்து விட்டது. அந்த நாளில் இத்தகைய போர்களுக்கு நடுநோக்காளர் கள் (Referees) வைக்கும் பழக்கம் இல்லை போலும் !