பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 93 போர் நடைபெறுவதைக் கண்டு வெற்றி தோல்வி யாருக்கு என்று கூற ஊரார்கள் கூடி, ஒரு நடுநோக் காளரை நியமிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், இப்போராட்டம் தொடங்கினதிலிருந்து ஒரு பெண் தன்னைத்தானே நடுநோக்காளராக அமைத்துக் கொண்டதை ஊரார் யாரும் அறியவில்லை. அந்தப் பெண்ணும், கூட்டத்தில் கலந்து கொண்டு, இக்காட்சியில் ஈடுபடாமல், மிகவும் உயரமாய் அமைந்துள்ள தன் வீட்டின் புறக்கடையில் நின்று கொண்டே இப்போராட் டத்தைக் கண்டாள். பருத்து வளர்ந்திருந்த ஒரு பனை மரத்தில் சாய்ந்து கொண்டு போராட்டம் முழுவதையும் கண்டாள். இவ்வாறு கண்டு இறுதியில் அப்போராட்டத்தின் முடிவைக் கூறிய பெண்மணிதான் நக்கண்ணையார்’ என்ற பெண்பாற் புலவர். புதிதாக அவ்வூருக்கு வந்த போர் வீரன் சோழன் போர்வைக்கோ பெருநற்கிள்ளி. ஆனால், அப்பொழுது அவன் அரசன் என்பதை யாரும் அறியார். அந்த ஊரானும் அல்லனாகையால், அவன் பெற்ற உண்மையான வெற்றியைக்கூட அவ்வூரார் மதிக்கவில்லை. ஆனால், உண்மையை நேரே கண்ட புலவர் இதோ பாடுகிறார் : - - 'எம் தலைவனாகிய கிள்ளிக்கு இது ஊரும் நாடும் அன்று. ஆதலால், ஒரு சிலர் அவன் வெற்றி பெற வில்லை என்றனர் ; சிலர் அவன் பெற்றது வெற்றியே என்றனர். இவ்வாறு இரண்டு கட்சியாய்ப் பிரிந்து ஊரார் கூவியது வேடிக்கையாக உள்ளது. காலில் உஆள சிலிம்பு குலுங்க யான் ஒடி என் வீட்டின் புறக்கடையில் உள்ள பனை மரத்திற் சாய்ந்து கொண்டு, அவன் வெற் தி பெற்றதை என் கண்ணாற் கண்டேன் !" என்னும் பொருளில் பாடல் உள்ளது. - என்ஐக்கு ஊர்இஃது அன்மை யானும் என்ஐக்கு நாடுஇஃது அன்மை யானும்