பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 A மகளிர் வளர்த்த தமிழ் ஆடுஆ டென்ப ஒருசா ரோரே ! ஆடுஅன்று என்ப ஒருசா ரோரே ! நல்ல பல்லோர் இருநன் மொழியே ! அம்சிலம்பு ஒலிப்ப ஒடி எம்மில் முழா அரைப் போந்தை பொருந்தி நின்று யான்கண் டனன்.அவன் ஆடுஆ குதலே 1: (புறம், 85) (ஐ-தலைவன் s ஆடு-வெற்றி ; அரை-மத்தளம் போன்ற அடியையுடைய பனைமரம்) ஊர்: பேர் தெரியாத இவ்வீரனிடத்தில் புலவர் நக்கண்ணையாருக்குக் காதல் பிறந்த கதையை அடுத்துக் காண்போம். 16. புலவர் காதல் புலவர் நக்கண்ணையாரின் ஊரில் நடைபெற்ற மற்போரில், புதியவனாய் வந்த இளைய வீரன் பழைய உள்ளுர் வீரனை வெற்றி கண்டான் என்பதையும், அவ்வெற்றியை விரும்பாத சில உள்ளுர் வாசிகள் வந்தவன் வெற்றி பெறவில்லை என்று கூச்சலிட்டார்கள் என்றும் கண்டோம். மேலும் அவர்கள் யாது கூறினாலும், வந்தவன் பெற்ற வெற்றியை நக்கண்ணையார் கண் ணாரக் கண்டார் என்றும் கண்டோம். நக்கண்ணையார் புதிய வீரன்மேல் காதல் கொண் டார் ; காதல் கொண்ட பிறகே அவனைப் பற்றிய செய்தி களை அறிய ஆவல் கொண்டார். ஆனால், பெண்ணாகிய அவருடைய ஆவலைத் தணிக்கக் கூடியவர் யார் ? இளம் பருவம் உடையவராகிய அவர் யாரிடஞ் சென்று தம் விருப்பத்தை அறிவிக்க முடியும்? தம்முடைய காதலால் விளைந்த துன்பத்தைப் பற்றி அறியவே அவருக்குச் சற்று