பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 95. நேரம் ஆயிற்று. ஒருவாறு அவனைப்பற்றி அறிய வேண் டும் என்னும் ஆவல் தூண்ட, வீட்டை விட்டு வெளியே புறப்பட்டார் நக்கண்ணையார். - புலவர் பெருமாட்டியார் வீரனைப்பற்றி விசாரிப் பதற்காக மன்றத்தை அடையும்பொழுது, மற்போர் முடிந்து அவரவர் வீடு செல்வதற்காகக் கலைந்து கொண் டிருந்தனர். புதிய வீரனைப் புலவர் தேடினார். பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் போலத் தோன்றி னாலும், உடன் பிறந்ததாகிய நாணம் அவரைத் தடை செய்துவிட்டது. பிறருடைய உதவியை இாடாமல் தாமே தேடிப் பார்த்தார். இந்நிலையில் சுற்றுப்புறத்தில் உள்ள வர்கள் பேசிக்கொள்ளும் சொற்கள் அவருடைய காது. களில் விழுந்தன. போர் முடிந்ததும் வெற்றி பெற்ற அப்புது விரன் யாருடைய பாராட்டுதலையும் பெற்றுக்கொள்வதற்காக நிற்கவில்லையாம். அவனை வாழ்த்த வேண்டும் என்று அவனருகில் ஒடியவர்களையும் அவன் சட்டை செய்ய வில்லையாம் ; தன் வேலை முடிந்தவுடன் வந்த வழியே திரும்பிப் போய்விட்டானாம். ஒரு சிலர், அவன் மிகவும் ஆணவம் கொண்டவன் என்று கூறிக்கொண்டனர். இன்னுஞ் சிலர், ஊரார்மேல் குற்றங்கூறினர்; 'அவன் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் வெற்றி இல்லை என்று கூச்சலிட்ட இவ்வூர் மக்கட்கு அவன் செய்த மரியாதை சரிதான் !" என்று கூறினர். புலவர் நக்கண்ணையார் அவர்கள் பேசுவன அனைத் தையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தார். ஊராருடைய பல கட்டுரைகளைச் சட்டை செய்யாமல், வெற்றி பெற்ற வீரன் போய்விட்டான் என்று அவர் கேட்ட பொழுது, அவருடைய மனத்தில் இனந்தெரியாத ஒரு மகிழ்ச்சி நிரம் பிற்று. இந்த ஊரார்க்கு இந்த அவமானம் வேண்டும் ! வேண்டும் ! என்று அவர் தமக்குள் கூறிக்கொண்டார்.