பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 A மகளிர் வளர்த்த தமிழ் தம்முடைய அன்பைப் பெற்றவனை இந்த ஊரார் எவ்வளவு அவமானப்படுத்தி விட்டனர் ! அவன் உயிரைப் பணயம் வைத்துப் பெற்ற வெற்றியைக் கூடப் பாராட் டாத இந்த ஊரார், இருந்தால் என்ன, ஒழிந்தால் என்ன ! புதிய வீரன் ஊராரை அவமரியாதை செய்ததால் ஓரளவு மகிழ்ச்சியடைந்த நக்கண்ணையாருக்கு அம்மகிழ்ச்சியின் முடிவில் ஒர் இடி காத்திருப்பது தெரியவில்லை. தம் காதலனை- ஊர் பேர் தெரியாத காதலனை- இனிக் காணமுடியாது என்ற உண்மை புலப்படச் சிறிது நேர மாயிற்று. அது புலப்பட்டவுடன் அவர் துயரக் கடலில் ஆழ்ந்து விட்டார். வீரன் ஊராரை அவமானம் செய்கின்ற முறையில் போய்விட்டான் என்பதால் பெற்ற மகிழ்ச்சியை, இனித் தாமும் அவனைக் காண முடியாது என்பதில் பெற்ற வருத்தம் அடக்கி மேலெழுந்து விட்டது. இவ் வதிர்ச்சியால் புலவராகிய நக்கண்ணையார் பெரிதும் இடிந்துவிட்டார். நாட்கள் ஓடி மறைந்தன. புலவர்தம் காதல் மட்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வரலாயிற்று. காதல் வளர வளர, உடம்பு இளைக்கலாயிற்று. உடம்பு இளைத்து விட்டமையின், கைகளில் உள்ள வளையல்கள் கழன்று விழலாயின. பல முறை வளையல்கள் தாமாகவே கழன்று விழுவதைத் தாய் கண்டுவிட்டாள். நன்கு கற்றுக் கவிதை இயற்றும் ஆற்றல் படைத்தவளாயினும் மகள் மணப் பருவத்தை அடைந்து காதல் நோயால் வாடுகிறாள் என்பதைக் கண்டு கொண் டாள் தாய். நக்கண்ணையார் பாடு மிகவும் திண்டாட்டமாகி விட்டது. உயிர்த்தோழி ஒருத்தியுண்டு. தம் காதலை மெள்ள அவளிடம் கூறினார் புலவர். என்றோ ஒரு நாள் ஊருக்குள் வந்துவிட்டு மறைந்துவிட்ட ஒருவன்மேல் காதல் கொண்டாள் என்றால் ஊரார் சிரிக்க மாட்டார் களா ? இதற்குள் இந்தச் செய்தி எப்படியோ ஊருக்குள் பரவிவிட்டது. - -