பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 97 இளம் பெண்களுடைய காதலைக் கண்டால் எள்ளி நகையாடி வம்பு பேசும் இந்த ஊருக்குப் புலவருடைய காதலைக் கேட்டவுடன், பேச்சுக்கு நிறைந்த விஷயம் அகப்பட்டுவிட்டது. "ஐயோ, பாவம் ! ஊர்பேர் தெரியாத ஒருவனிடம் காதல் கொண்டு அல்லல் உறுகின்றாளே !' என்று கருணை காட்டுவதற்குப் பதிலாக இப்பொழுது ஊரார் பழி தூற்றுகின்றனரே இவர் துன்புற்று அழியக் கடவர் ! இவ்வருத்தம் அனைத்தையும் சேர்த்துப் புலவர் இதோ பாடுகிறார் : காலில் கட்டப்பெற்ற வீரக் கழலை அணிந்த கரிய குஞ்சியையுடைய காளை போன்றவனாகிய வீரன் காரணமாக என்னுடைய வளையல்கள். கழல் கின்றன. அவை கழல்வதை எங்கே தாய் பார்த்துவிடப் போகிறாளோ என அன்னைக்குப் பயப்படுவதா, போர் புரிகின்ற அவனுடைய தோளை அணைய வேண்டின் அதற்கு நாணம் அடைவதா? இரண்டில் எதனைச் செய்வ தென்று அறியாமல் அல்லல் உறுகின்ற என்னைப்போல, பழி தூற்றும் இந்த ஊரும் அல்லல் உறுவதாக " என்ற பொருளில் பாடுகிறார் : 'அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன் தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே ! அடுதோள் முயங்கல் அவைநா னுவலே ! என்போல் பெருவிதுப் புறுக என்றும் ஒருபால் படாஅ தாகி * இருபால் பட்டஇம் மையல் ஊரே !” (புறம். 83) புலவர் இவ்வாறு தம் வருத்தத்தைக் கவிதையாகப் புனைந்து கொண்டிருக்கும் நாளில் ஒரு நிகழ்ச்சி நடை பெற்றது. யாரோ ஒருவர் நக்கண்ணையாரின் தாயிடம் பேசிக்கொண்டிருந்தனர். w வந்தவர்கள் பேசிய பேச்சிலிருந்து ஓர் உண்மை வெளிப்பட்டு விட்ட து. நக்கண்ணையாரைப் பற்றிய மகளிர்-7 .