பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 A மகளிர் வளர்த்த தமிழ் கவலை அவர்கட்கு ஒரு சிறிதும் இல்லை ; அதற்குப் பதிலாக, ஊர் பெயர் தெரியாத ஆண்டியிடம் அவர் கொண்ட காதல் எவ்வளவு பைத்தியக்காரத் தனமானது என்று எடுத்துக்காட்டவே அவர்கள் முனைந்து நிற்கிறார் கள். அன்புடையவர்கள் போல நடிக்கும் அவர்கள், அவருடைய காதலையும் காதலனையும் பழிப்பதற். கல்லவா வந்துள்ளார்கள் ! அட, பாவிகளா ! எவ்வளவு துணிச்சல் இவர்கட்கு தம்முடைய காதலன் பிச்சைக்கர்ரனாம் ! தாய் தந்தை' யற்ற அனாதையாம் ! அன்றாடம் கூழ் குடிப்பத்ற்குக் கூடத் திண்டாட்டமாம் இருந்துவிட்டுப் போகட்டுமே ! இவர்கள் வீட்டில் அவன் வந்து கூழ் ஊற்றுங்கள் என்று கேட்டானா? இவர்கள் முகத்தில் கரியை வழித்துப் பூசுவது. போலத்தானே அவன் திரும்பிக்கூடப் பாராமல் போய் விட்டான் ? அந்த வீரனைப் பழிக்க எப்படித்தான் இவர் கட்குத் துணிவு பிறந்தது? - கூழ் குடிக்கும் வீரனிடத்தில் விருந்துண்னும் இவ் வீரன் பட்ட பாட்டை இவ்வூரார் கண்களிருந்தும் காண வில்லையா ? காண மறுத்தது யாருடைய குற்றம் ? புரட்டிப் புரட்டி அடித்தானே அவளுடைய காதலன், உள்ளூர் வீரனை உப்பு வாணிகர், பழைய நாளில் வண்டிகளில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஊர் ஊராகச் சென்று வாணிகம் செய்வர். நிறைந்த பாரம் ஏற்றிய அந்த வண்டிகளை மாடுகள் முண்டியடித்துக் கொண்டு இழுத்துச் செல்லும். சேறு நிறைந்த ஆற்றங் கரையாய் இருந்துவிட்டால், மாடுகளின் ப்ாடு திண்டாட் டந்தான் ! எனவே, வணிகர் இத்தகைய சேறு நிறைந்த துறைகளைக் கண்டால் அஞ்சி நடுங்குவர். அதே போலப் புதிய வீரனைக் கண்டவுடன் உள்ளுர் வீரர் அனைவரும் அஞ்சி நடுங்கி விட்டனர். ஊரார்கள் தாய்க்குப் புத்திமதி கூறுவதைக் கேட்ட புலவர்க்கு அவர்கள் மேல் ஆத்திரம், பற்றிக் கொண்டு வந்தது. சுடச்சுப. அவர்கட்கு விடை