பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 99 கூற முனைந்தார். அந்த விடையும், அவர் கவிஞர் ஆதலின், கவிதையிலேயே அமைந்துவிட்டது. "என்னுடைய தலைவன் கூழ் குடித்தாலும் பெரிய தோளையுடையவன் யான் வீட்டினுள் அடைபட்டிருப் பினும், பொன் போன்ற நிறங் கொண்டுள்ளேன். கூழ் குடிக்கும் என் தலைவன் போர்க்களம் புகுந்தால், எதிர்த்து வருகின்ற போர் வீரர்கட்கு எத்தகையவன்' தெரியுமா ? சேறு நிறைந்த ஆற்றுத் துறை வண்டி களை ஒட்டிச் செல்லும் உப்பு வாணிகர்க்கு எவ்வளவு அச்சத்தைத் தருமோ, அவ்வளவு அச்சத்தைத் தருவான் ' என்ற பொருளில் பாடல் உள்ளது : 'என்ஐ, புற்கை உண்டும் பெருந்தோ னன்னே ! யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் ம்ைமே ! போர்எதிர்ந்து என்ஐ போர்க்களம் புகினே கல்என் பேருர் விழவுடை ஆங்கண் ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு ம். உமணர் வெரூஉம் துறையன் னன்னே !” . - (புறம். 84) (என்.ஐ-என் தலைவன் புற்கை-கூழ் புறஞ்சிறை வீட்டினுள் ; கல்என் பேரூர்-கல்லென்ற ஒ ைச ைய யுடைய ஊர் : மள்ளர்க்கு-வீரர்கட்கு ; உமணர் - உப்பு வாணிகர் ; வெரூஉம் துறை-அஞ்சும் ஆற்று வழி1 புலவர் நக்கண்ணையாரின் காதல் அந்த வீரனால் திருப்பித் தர முடியாதபடி ஒருதலைக் காதலாக (கைக்கிளை) அமைந்து விட்டது வருத்தத்திற்கு உரியதா யினும், அதனால் பிறந்த கவிதைகள் வியக்கத் தகுந்தவை ! 口 ○ 口