பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 5 நாயனார்கூட கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை, என்று புகழ்ந்து பாடினார். முல்லைக் கொடி ஒன்று கொழு கொம்பு இல்லாது வாடி யதைக் கண்ட பாரி, தான் ஏறிச் சென்ற தேரையே அந்தக் கொடி பற்றிப் படர்வதற்குரிய கொழு கொம்பாக நிறுத்தி விட்டுப் போனான் என்றால் அவனது வள்ளல் தன்மையை என்னென்று புகழ முடியும் ! . . - - பாரியின் புகழ் 57೧-ಸಿಹಿ பரவியது. சிற்றரச னாகிய பாரிக்கு வளரும் புகழைக் கண்டு, சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தரும் பொறாமை கொண்டனர். உடனே, அச்சிற்றரசன் மேல் மூவரும் படையெடுத்தனர். பாரியின் தலைநகரும் கோட்டையும் பறம்பு மலையின் மேல் இருந்தன. அம்மலையை முற்றுகையிட்ட மூவேந் தரும், நாட்கணக்கில் கீழே காத்துக் கிடந்தனர். எத்துணை நாட்கள் முற்றுகை இட்டாலும், பாரியைப் போரில் வெல்ல முடியாதென்றும், அவனிடம் பரிசிலாகக் கேட் டால் எதை வேண்டுமானாலும் பெறலாம் என்றும் கபிலர் மூவேந்தர்கட்கும் அறிவித்தார். அதைக் கேட்ட அவர்கள் திரும்பிச் சென்று விட்டார்கள். சென்றுவிட்ட அவர்கள், மிக இழிவானதும் தவறானதும் ஆகிய ஒரு செயலைச் செய்யத் துணிந்தனர். - . . மூவேந்தரும், நடனமாடுகின்ற கூத்தர் போல வேடம் போட்டுக்கொண்டு பாரியிடம் வந்து கூத்தாடினர். அவர்கட்குப் பரிசிலாக யாது வேண்டும் ? என்று பாரி கேட்டான். நீ தான் வேண்டும், என அக்கொடியவர்கள் கேட்டுவிட்டார்கள். வ ள் ள ல் பாரி அவர்களுடன் சென்றான். இவ்வாறு வஞ்சகமாக அவனைக் கொன்று, தமிழ் நாட்டுக்கு அழியாப் பழியைத்தேடித் தந்தனர். மூவேந்தரும். , , . . . * * - பாரி இறந்த மறுமாதம். ஒரு நாள், பூர்ணிமை நிலவு வீசிக்கொண்டிருக்கிறது. முதல் மாதம் பூர்ணிமையில்