பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 A மகளிர் வளர்த்த தமிழ் பாரியும் அவன் மகளிரும் நிலவில் அமர்ந்து மகிழ்ந்திருந் தனர். ஆனால், இந்தப் பூர்ணிமையில் அவன் போய் விட்டான். அவர்கள் மட்டும் இருக்கிறார்கள். நிலவைக் காண அவர்கள் துயரம் ஆறாய்ப் பெருகுகிறது. வீரனுக்கு மக்களாய்ப் பிறந்தமையின், போரில் அவன் இறந்திருந் தால் ஒருவேளை அ வ் வ ளவு வருத்தப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், வஞ்சித்துக் கொல்லப்பட்டதால், அவர்கள் துயரம் எல்லை கடந்ததாகி விட்டது. பெரிய மன்னர்களாம் மூவேந்தர்களும் சிறிய சிற்றரசனை வஞ்சகமாகக் கொல்பவர்கள் எவ்வளவு பெரிய வீரர்கள் இவர்கட்கும் எவ்வளவு பெரியபடை இருக்கிறது ! வெட்கம் : வெற்றி முரசம் அடிக்கிறார் கள், மானத்தை விட்டு விட்டு சிறிய மன்னனைப் போர் செய்து கொல்ல முடியாமல், வஞ்சகமாகக் கொன்ற இவர் கட்கு ஏனோ இந்த வெற்றி முரசம் !" என இவ்வாறெல் லாம் நினைந்து வருந்துகிறார்கள் பாரியின் அருமை மகளிர் இருவரும். ஆனால், இவ்வளவு விரிவாகக் கூற முடியுமா கவிதை யில் ? இவ்வாறு கூறினால் அதைக் கவிதை என்றுதான் கூற முடியுமா ? எனவே, குறிப்பாக ஒரு சொல்லில் இவ்வளவு இகழ்ச்சியையும் கொட்டித் தீர்த்து விடுகிறார் கள் அப்பெண்கள். இதோ, பாடலைப் பாருங்கள் ! அவலச் சுவை (சோக ரஸம்) பொங்கி வழிவதைக் &};ffGðWTGL) fr Ls - . “அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில் எந்தையும் உடையோம் எம் குன்றும் பிறர்கொளார் ! இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில் வென்று எறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார் ! யாம் எந்தையும் இலமே!’ (புறம், 112) பாடல் மிக எளிதாகப் புரியக்கூடியதுதான். கடைசி அடியிலேதான் எவ்வளவு அவலச் சுவை ! போன மாதம்