பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 A மகளிர் வளர்த்த தமிழ் தாங்கிய பலருள்ளும் சிலரே உண்மையில் கவி பாடும் திறம் பெற்றுத் திகழ்ந்தனர். நல்வழி போன்ற நூல் களை இயற்றிய ஒளவையார் ஒருவரும் உண்டு. - சங்க காலத்தில் வாழ்ந்த ஒளவை மூதாட்டியார், போக்குவரத்து வாய்ப்பு ஒன்றும் இல்லாத அந்நாளிற் கூடத் தமிழ் நாடு முழுவதையும் சுற்றித் திரிந்துள்ளார். சிற்றரசர் , பேரரசர் ஆகிய அனைவருடைய அவைகளி லும் இவர் சென்று வந்துள்ளார் ; பலரைப் பற்றியும் பாடியுள்ளார். அகநானூற்றில் நான்கும், குறுந்தொகையில் பதினைந்தும், நற்றிணையில் ஏழும், புறநானூற்றில் முப்பத்து மூன்றும், இவர் பாடிய பாடல்களெனக் காணப் படுகின்றன. சங்க இலக்கியத் தொகுதியாகிய எட்டுத் தொகையில் இவர் பாடல்கள் ஐம்பத்தொன்று அளவால் அதிகமான பாடல்கள் மட்டும் இவருடையன என்பதற் கில்லை ; மிகச் சிறந்த கருத்தமைந்தனவும், கற்பனை வளஞ் செறிந்தனவும், உணர்ச்சிப் பெருக்குடையனவும் ஆகும் இவருடைய பாடல்கள். தமிழ் நாட்டின் பல பகுதிகளையும் சுற்றித் திரிந்த பாட்டியாருக்குப் பல உண்மைகள் தெரியலாயின. தமிழ் நாட்டில் பல பகுதிகள், நீர் வளம் மிக்கு, வேலி ஆயிரம் கலம் விளையும் இடமாயும் இருந்தன. இவற்றின் எதிர், கல்லையன்றி வேறு ஒன்றும் விளையாத பகுதிகளும் இருந்தன. பெரிய மலைகளும் இந்நாட்டில் உண்டு. இவற்றையெல்லாம் சுற்றி, இவ்விடங்களில் வாழும் மனிதர்களுடனும் பழகிய பாட்டியாருக்கு ஒர் உண்மை தெளிவாயிற்று. வளமுடைய பகுதிகளில் நல்லவர்களும், வளமற்ற பகுதிகளில் பொல்லாதவர்களும் இருப்பார்கள் என்று ஒரு காலத்தில் பாட்டியார் நினைத்தார். வள முடைய பகுதியை நல்ல நாடென்றும். அல்லாத பகுதியை அல்லாத நாடென்றும், கூறினார்கள் மக்கள். இவ் விரண்டும் தவறானவை என்பதைப் பாட்டியார் கண்டு