பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 9 பிடித்தார், அனுபவமூலமாக. உடனே இக்கருத்தை ஒரு பாடலாகப் பாடினார் : 'நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ, அவலாகு ஒன்றோ, மிசையாகு ஒன்றோ, எவ்வழி நல்லவர் ஆடவர் ? அவ்வழி நல்லை வாழிய நிலனே !! (புறம். 187) “நாடே, நீ நாடாய் இருந்தாலும், காடாய் இருந் தாலும், பள்ளமாய் இருந்தாலும், மேடாய் இருந்தாலும் சரி ! எங்கே நல்லவர்கள் வாழ்கிறார்களோ, அங்கேதான் நீ நல்ல நாடென்று கூறப்படுவாய் ! என்பதே இப்பாட லின் பொருள். இது இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர்ப் பாடியதுதான். ஆனாலும், இன்று வரை, ஏன் நாளையுங்கூட, இதனை மறுக்கவோ, இல்லை யென்று கூறவோ இயலுமா ? இத்தகைய ஆழ்ந்த கருத் துக்களைச் சிறிய பாடல்கள் மூலம் வெளிப்படுத்தும் பெருமை வாய்ந்தவர் பாட்டியார். பல நாடுகளில் வாழும் பலரிடம் சென்றாலும், அதியமான நெடுமான் அஞ்சி என்ற ஒரு சிற்றரசனிடம் பாட்டியாருக்கு அலாதி, யான பற்று உண்டு. அவனைப் பற்றித்தான் இவர் பல பாடல்கள் பாடியுள்ளார். - அதியமான் ஒரு சிறிய நிலப்பரப்பின் அரசனே யாயினும், வள்ளல் தன்மையுடையவன் ; கடையெழு வள்ளல்களுள் ஒருவன் ; பாரி வள்ளலைப் போன்ற பரந்த மனப்பண்பு உடையவன். எனவே, ஒளவைப் பாட்டியாருக்கு அச்சிற்றரசன்மேல் தனிப் பற்று ஏற்பட்டது. பல முறை அவனைக் காணச் சென்றுள்ளார் ஒளவையார். ஒரு முறை இவரைக் கண்டவுடன் பரிந்து வந்து பெரிதும் உபசரித்தான் அதியமான். நீண்ட தூரம் நடந்து வந்தமையின், பாட்டியார் மிகவும் களைப் படைந்து காணப்பட்டார். உடனே தன் மடியில் மிகவும்.