பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 A மகளிர் வளர்த்த தமிழ் பாதுகாப்புடன் வைத்திருந்த நெல்லிக்கனியை எடுத்து, "இதனை உண்க : எனக் கொடுத்தான் மன்னன். தமிழ் நாட்டில் நெல்லிக் கணிக்குத்தானா பஞ்சம் ? உடனே பாட்டியார் அப்பழத்தை வாங்கி உண்டார் : நன்றாகச் சுவைத்து உண்டார் ; நாவைச் சப்புக் கொட்டினார். இவரையும் அறியாமல் ஒர் ஐயம் பிறந்தது. உடனே இவருக்கும் அதியமானுக்கும் இடையே கீழ் வருமாறு ஒர் உரையாடல் நிகழ்ந்தது : - ஒளவை . அதியா, நீ தந்த பழம் யாது ? அதியமான்: ஏன், பாட்டியீர் நெல்லிப் பழந்தான் ! சுவைகூடவா தெரியவில்லை ? ஒளவை : உலகில் இதுபோல் சுவையைக் கண்டதே. இல்லை. அதனாலேதான் சந்தேகப்பட்டுக் கேட்டேன். இது என்ன ? சாதாரண நெல்லிப் பழந்தானா ? அதியமான் : நெல்லிப்பழந்தான் ; ஆனால், சாதா ரணப் பழமன்று இது இப்பழம் பன்னிரண்டு ஆண்டு கட்கு ஒரு முறைதான் பழுக்கும். அதுவும், ஒரே பழந்: தான் பழுக்கும். பெரிய இரண்டு மலைகளின் நடுவே உள்ள ஒர் ஆழமான பள்ளத்தில் பழுக்கிறது இது. இதைப் பறிப்பதற்குப் பெரு முயற்சி செய்ய வேண்டும் ! ஒளவை . அவ்வளவு பாடுபட்டு, ஏனப்பா இதனைப் பறிக்கவேண்டும் ? ஊரில் எவ்வளவோ நெல்லிப் பழங்கள் கிடைக்குமே ? • . அதியமான் : கிடைக்கலாம் ! ஆனால், இப்பழத்தை உண்பதனால் கி ை- க்கு ம் பயன் அப்பழங்களால் கிடைக்குமா ? - - . . . - ஒளவை: நெல்லிப்பழம் உடம்புக்கு மிகவும். நன்மை செய்யும். இப்பழமும் அவற்றுள் ஒன்றுதானே ?