பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 11. அதியமான் : அன்று அன்று ! இப்பழத்தை உண்ட வர்கள் மிக நீண்ட் காலம் நோய் நொடியின்றி உயிருடன் வாழ்வர். சுருங்கக் கூறினால்...... - ஒளவை சொல்லு, சொல்லு விரைவிற்கூறு ! சுருங்கக் கூறினால்...... அதியமான் : இவ்வுலகிற்குக் கிடைக்கக்கூடிய அமிழ்த மாகும் இது. அமிழ்தம் உண்பவர் அடையும் பயனை இது அடைவிக்கும். ஒளவை : ஆ அதியா, நீ என்ன காரியஞ் செய்து விட்டாய் ! இவ்வாறு செய்யலாமா ? இவ்வளவு நன்மை செய்யும் பழத்தை நீயல்லவா உண்ண வேண்டும் ? அரசனாகிய நீ இதனை உண்டு நெடுங்காலம் வாழ்ந்: தால், குடிகட்கு நன்மை உண்டாகும். கிழவியாகிய யான் உண்டு யாது பயன் விளையப் போகிறது ? அதியமான் : பாட்டியீர், போனால், எத்தனையோ அரசர்கள் உண்டு இவ்வுலகில். நீங்கள் உயிர் வாழ்வதால் தமிழும் தமிழர்களும் ஒருங்கே வாழ முடியும். ஆதலாலே தான் உங்கட்கு இதனைத் தந்து உண்ணச் செய்தேன். ஒளவை அதியா, இது என்ன காரியம் ! இதன் தன்மையை என்னிடம் முதலிலேயே கூறியிருந்தால் யான் மறந்துகூட இதனை உண்ணத் துணியேனே ! இன்னது என்று கூறாமல் தந்து என்னை வாழ வைத்தாய் ! ஆம் : சிவபெருமானைப்போல நீ வாழ்வாயாக ! - . . .” இம்முறையில் அதியமானுக்கும் ஒளவையாருக்கும். உரையாடல் நடைபெறவில்லை : ஒருவேளை நடை பெற்றும் இருக்கலாம். ஆனால், அது பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. இப்பொழுது நாம் அறிவது ஒளவையார் இச்சந்தர்ப்பத்தில் பாடிய பாடல் ஒன்று' தான். அப்பாடலிலிருந்து இவ்வளவு பொருளையும் நாம் <别 றிதல் கூடும். -