பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 A மகளிர் வளர்த்த தமிழ் வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார் களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை ஆர்கலி நறவின் அதியர் கோமான் போரடு திருவில் பொலந்தார் அஞ்சி ! பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே : தொன்னிலைப் பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட சிறுஇலை. நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் காதல் நீங்க எமக்குஈத் தனையே ! (புறம். 91) (வெற்றி பொருந்திய வாட்படையை ஏ ந் தி ப் பகைவரைப் போர்க்களத்தில் வெல்லும் வீரக்கழலை அணிந்த நீண்ட கையையுடைய மதுவை உண்ணும் அதியர் தலைவனே, போரிடும் அழகிய வில்லை ஏந்திய அஞ்சியே, பால் போன்ற பிறைச் சந்திரனை நெற்றியில் கொண்ட நீலகண்டனைப் போன்று நீயும் வாழ்வாயாக ! பழைய பெரிய மலையில் ஆழ்ந்த பள்ளத்தில் சிறிய இலையை உடைய நெல்லிப் பழத்தின் இயல்பைப்பற்றி ஒன்றுங் கூறாமல் உன் மனத்துள் அடக்கிக்கொண்டு, சாவு நீங்க எனக்குத் தந்தாய்.1 இப்பாடலில் காணப்படும் அருமைப்பாட்டை அறிய வேண்டும். தமது வாழ்வை நீடிக்கச் செய்யும் பழத்தை .யார்தான் பிறருக்குத் தருவார் ? இப்படி யாரேனும் முன்னர்ச் செய்ததுண்டா ? உண்டு. ஒரு வ ன் தான் இவ்வாறு செய்தான். சாவையேதரும் என்று அறியப்பட்ட நஞ்சை (விஷத்தை) வேண்டுமென்றே, தான் உண்டான் ஒருவன். ஏன் ? அவ்வாறு உண்டு வாழ்வைத் தரும் அமிழ்தத்தைத் தேவர்கட்கு வழங்கினான் அவன் ! ஆனால், நிகழ்ந்தது யாது? இதோ சிலப்பதிகார ஆசிரியர் பாடுகிறார் அதுபற்றி :