பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

મ. ક. ஞானசம்பந்தன் A 13. 'விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்துஅருள செய்குவாய்” எப்படியாவது வாழ வேண்டும் என்று கருதின தேவர்கள், அமுதை உண்டும் இறந்தார்கள். ஆனால், அவர்களை வாழவைப்பதற்காக இறைவன் விடத்தை உண்டான். என்ன அதிசயம் ! அவன் சாகவில்லை : 'நீலகண்டன்' என்ற பெயருடன் வாழ்கிறான். அதியமான் சிறந்த நெல்லிப் பழத்தைத் தான் உண்ணாமல் பாட்டியாருக்கு வ ழ ங் கி ய செயல் சிவபெருமானுடைய செயலை நினைவூட்டியது. ஆதலால், அந்த நீலகண்டன் போலவே நீயும் வாழ்வாயாக!' என்று பாட்டியார் மனங்குளிர அவனை வாழ்த்துகிறார். 'நீல மணி மிடற்று ஒருவன் போல மன்னுக !' என்ற இவருடைய வாழ்த்து, உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து நன்றியுடன் வெளி வருவது நன்கு தெரிகிறது. இக்கவிதை, யில். 3. பெண் தூதுவர் இந்திய நாட்டின் அருமைப் புதல்விகளுள் ஒருவராகிய விஜயலக்டிமி பண்டிதையார் இந்திய நாட்டின் தூதுவராய் இரவிய நாட்டிற்கும், அமெரிக்க நா ட் டி ற் கு ம், இங்கிலாந்து நாட்டிற்கும் சென்றதைக் கண்டு இந்: நாட்டில்- ஏன் ?- வேற்று நாட்டிலுங்கூட- பலர் வியந்தனர். இதுவரை பிறநாட்டார் செய்யாத செயல் என்று கூறினர். அவர்களுடைய நாடுகளைப் பொறுத்த, வரை இது புதுமையாய் இருக்கலாம். இந்தியாவிற்குக் கூடத் தமிழ்நாடு அல்லாத பிற பகுதிகட்கு இது புதுமை யாய்த் தோன்றலாம். ஆனால், தமிழர்கட்கு இச்செயல்: புதுமையன்று. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இத்தமிழ் நாட்டில் ஒரு பெண்ணை ஒரு மன்னன் மற்றொரு மன்னனிடம் தூது அனுப்பினான்.