பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 A மகளிர் வளர்த்த தமிழ் ஒரு நாட்டின் அல்லது மன்னனின் தூதாகப் பிற நாடு செல்வது அவ்வளவு எளிதானதன்று. சாதாரண காலங் களிற் கூடத் தூது செல்லலாம். ஆனால், போர் நிகழக் கூடிய அறிகுறிகள் தோன்றும் பொழுது தூது செல்லல் மிக மிகத் தொல்லை தருவது ஒன்று. அரசியல் வகுத்த வள்ளுவப் பெருந்தகையார் தூது’ என்று ஒர் அதிகாரமே வகுத்துள்ளார் என்றால், அதன் பெருமையை எவ்வாறு கூறுவது தூது செல்வார்க்கு இன்றியமையாதன என மூன்று இயல்புகளைக் குறள் குறிக்கின்றது. அன்பு:அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று. (குறள்-682) என்ற குறளில் எவ்வளவு பொருளாழம் தோன்றுகிறது ! அன்பு வேண்டும் தூதுவருக்கு. ஆனால், யாரிடம் அன்பு தேவை? தம் அரசனிடம் அன்பு வேண்டும். இதனை ஒரு பெரிய காரியமாக வள்ளுவர் கூற வேண்டுமா ? என்று கூட நினைக்கத் தோன்றும். ஆனால், இந்நாட் களில் சில நாட்டின் தூதுவர்கள் திடீரென மறைந்து விடுகிறார்கள் ; பின்னர் மற்றொரு நாட்டில் தஞ்சம் புகுந்துவிடுகிறார்கள் இன்னுங் கூறப்போனால், சில மறைபொருளான கடிதம் முதலியவற்றையும் உடன் கொண்டு சென்று விடுகிறார்கள். இந்நாளில் இவ்வாறு செய்யும் தூதுவர் செயல் சரியா என்ற ஆராய்ச்சி இவண் தேவையில்லை. ஆனால், தூதுவருக்குத் தம் அரசனிடம் அன்பு வேண்டும் என்று கூறிய வள்ளுவர் வார்த்தை எவ்வளவு தீர்க்க தரிசனத்துடன் கூறப்பட்டது என்பதை அறியலாம். - . - * : -. - நிறைந்த அன்பு உடையார் மட்டும் தூதுவராய் இருந்து பயனில்லை. அறிவு கலவாத அன்பு தீமையே விளைக்கும். அதுவும் தம் அரசனுக்கு எப்பொழுது தேவை என்பதை அறியும் அறிவாக இருத்தல் வேண்டும். இவ்வறிவு இருத்தலைவிட, அன்புடைமை இன்றியமை