பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 15 யாததாகலின், அதனை முதலிலும் இதனை அடுத்தும் குறள் கூறுகிறது. காரணம் யாது ? அறிவு குறைந்த அன்பு மட்டும் உடையார், தாமாக ஒன்றைச் செய்ய முடியாது, ஆனால், எடுத்துக் கூறியதைச் சென்று கூறி விடுவார்' அறிவிருந்து அன்பில்லாதவர் வேண்டும் என்றே தீமையை விளைக்கப் பின் வாங்கமாட்டார். ஆதலாலேதான், 'அன்பு முதலிலும் அறிவு இரண்டாவதாகவும் இடம் பெற்றன. மூன்றாவதாக உள்ளது சொல்வன்மை. எத்துணை அன்பும் அறிவும் இருப்பினும், தூதுவனுடைய செயல் வேற்று மன்னனிடம் எடுத்துக் கூறவேண்டிய செய லன்றோ ? எனவே, சொல் வன்மை மூன்றாம் இடத்தைப் பெறுகிறது. தம் சொல் வன்மை காரணமாகப் பகை யுடைய இருவரைச் சேர்த்து வைக்கவும் கூடும். சொல் வன்மை இன்மையாலும், தவறான வழிப் பயன்படுத்து முகத்தாலும் நட்புடைய இருவரைப் பிரித்துவிடவும் கூடும். ஆதலால், வெறுஞ் சொல் வன்மை என்று கூறாமல், ஆராய்ந்த சொல்வன்மை' என்று குறள் குறிக் கிறது. தூது உரைக்கப்படும் மன்னன் மனநிலை அறிந்து பேச வேண்டும். ஆடிக் கறக்கும் மாட்டை ஆடியும் பாடிக் கறக்கும் மாட்டைப் பாடியும்கறத்தல் வேண்டும்.: என்பது தமிழ்நாட்டில் வழங்கும் பழமொழி. எனவே, எத்தகைய சொல்லை எந்த நேரத்தில் கூற வேண்டும் என்பது ஆராய்ச்சியின் பாற்பட்டது. அங்க ண ம் ஆராய்ந்து சொற்களைப் பயன்படுத்துகையில் வன்மை யுடன் பயன்படுத்த வேண்டும். - - - - - . இம்மூன்றையுமடுத்து இன்னும் பல இயல்புகளைக் குறள் குறிக்கின்றது. அவற்றுள் ஒரு குறளை மட்டும் கண்டு மேலே செல்லலாம் : - - "தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது." (குறள். 685)