பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 A மகளிர் வளர்த்த தமிழ் வேற்றரசனுக்குப் பல காரியங்களைச் சொல்லும் வழி காரண வகையால் தொகுத்துச் சொல்லியும், இன்னாத காரியங்களைச் சொல்லும் பொழுது கடுமையான சொற். களை நீக்கி, இனிய சொற்களால் அவன் மனமகிழச் சொல்லியும், தம்மரசனுக்கு நன்மை பயப்பவரே நல்ல துTதுவராவர்,' என்பதே இக்குறளின் பொருள். சிலர், விரிவாக எடுத்துப் பேசிய வழி உடம்படுவர். மற்றும் சிலர், காரண காரியங்களை எடுத்து விவாதித்துக் கூறிய வழி ஏற்றுக் கொள்வர். சிலர் சுருங்கக் கூறுவதை ஏற்பர். மற்றுஞ் சிலர், சிரிக்கப் பேசுகின்ற காரணத்தால் சொல்வதை ஏற்றுக் கொள்வர். இவை அனைத்தையும் அறிந்து பேசுபவனே சிறந்த தூதுவன் என்கிறார் வள்ளுவர். இவ்விலக்கணமெல்லாம் ஆண்பாலில் கூறப் பெற்றிருப்பது உண்மைதான். எனினும், இரண்டு ப்ாலுக்கும் ஏற்பனவாகவே இவற்றைக் கொள்ள வேண்டும். மேலே கூறிய அனைத்திலக்கணங்களும் பொருந்திய பெண் தூதுவர் ஒருவர் உண்டென்றால், வியப்படையா மல் இருக்க முடியாது. அதுவும் அவ்வளவு பழைய நாளில் 'இருந்தார் என்றால், அவர் யார் என்று கேட்கத் தோன்று: கிறதா ? யாராய் இருத்தல் கூடும் ! ஒளவையாரேதான். ஒளவையார் தம் நண்பனான அதியமானுக்காகத் துTது: சென்றார். : அதியமான் அஞ்சி, சிறந்த வள்ளல் ; கடையெழு ள்ளல்களுள் ஒருவன். என்றாலும், நம்மைப் போன்ற மக்கள் நடுவேதான் அவன் வாழ நேரிட்டது. அது அவனுடைய குறையன்று. ஆனால், அதனால் விளைந்த பயனை அவனும் அனுபவிக்க நேரிட்டது. தன்னிக ரில்லாத பாரி வள்ளலின் கதி என்னவாயிற்று ? பாரி வஞ்சகமாகக் கொல்லப்பட்டான் ! அதுவும் அறத்தைக் காக்கப் பிறந்த மூவேந்தரால் கொல்லப்பட்டான் !