பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 17 இவ்வுலகம் தோன்றிய நாளிலிருந்தே இந்நிலைதான் இருந்து வந்துளது . வருகிறது. மிக நல்லவர்கட்கு இவ்வுலகம் தரும் பரிசில் யாது ? விஷம், சிலுவை, கல், து ப் ப ா க் கி க் குண்டு என்பவைகளே அப்பரிசுகள். சாக்கரட்டீஸுக்கு விஷமும், ஏசுநாதருக்குச் சிலுவையும், நபிகட்குக் கல்லும், காந்திக்குக் குண்டும் தந்த உலகம் இது : மகாத்துமா இறந்தவுடன் பேரறிஞர் பர்னாட்ஷா" கூறியது நினைவுக்கு வருகிறது. அளவு மீறி நல்லவராய் இருப்பது எவ்வளவு ஆபத்தானது ' எ ன் பன வே. அம்மேதை கூறிய சொற்கள் ! முல்லைக் கொடிக்குத் தான் ஏறி வந்த தேரை நிறுத்திச் சென்ற பாரியையுங்கூட வஞ்சகமாகக் கொல்ல அஞ்சாத மக்கள் நிரம்பிய உலகமன்றோ இது அதியமா னாகிய வள்ளல், பிறருடன் வீணாகப் போருக்குப் போகிறவன் அல்லன். அவனாகப் போருக்குப் போகாவிடி னும், இவ்வுலகம் அவனைச் சும்மா இருக்கவிடவில்லை : தொண்டைமான் என்ற மற்றொரு சிற்றரசன் வாழ்ந் தான் அதியன் காலத்தில் தானும் ஒரு சிற்றரசனேயா யினும், கொஞ்சம் படை சேர்த்துக்கொண்டு அதியமா னிடம் போருக்குத் தயாராகிவிட்டான். தொண்டைமான் போருக்கு மார் தட்டிய நேரத்தில் அதியன் கை தாழ்ந் திருந்தது. அதற்கு முன்னர்த்தான் மற்றொரு போர் செய்து அதியன் மிக வு ம் களைப்படைந்திருந்தானாகலின், தொண்டைமானுடன் போர் தொடுக்கும் நிலையில் இல்லை அவன். ஆனால், அவனாகப் போருக்கு எழ வில்லையே தானாக வரும் போரை எவ்வாறு தடுப்பது ? பல முறை ஆராய்ந்து பார்த்தான் அதியன். யாரையேனும் சமாதானத் துTதாக அனுப்பலாம் என்ற முடிவுக்கு வந்தான். செல்கிறவர் அவனுடைய மதிப்பைக் குறைக் காமலும் பேச வேண்டும் ; போரையும் நிறுத்த முயல மகளிர்-2