பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 19 'இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்அணிந்து கடியுடை வியல்நக ரவ்வே; அவ்வே, பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொல்துறைக் குற்றில மாதோ ! என்றும் உண்டாயின் பதங்கொடுத்து இல்லாயின் உடனுண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல்எங் கோமான் வைந்நுதி வேலே !’ (புறம். 95) (இவ்வே-இவைகள், கண் திரள் நோன் காழ்உடல் திரண்ட வலிய காம்பு, கடியுடை வியல் நகர்-பாது காவலுடைய அகன்ற இடம், அவ்வே-அவைகள், குற்றிலசிறிய உலைக்களத்திலுள்ளவை, பதம்-உணவு, ஒக்கல்சுற்றம்) - - - இத்தகைய அறிவுடைய தூதுவர் பாடலில் எத் துணைச் சிறப்புக்கள் காண்கின்றன முதல் மூன்றடிகள் மூலம் தொண்டைமானுடைய படைச் சாலையைப் புகழ்வது போலப் பேசினார் புலவர். அவன் மகிழ்ந்தான். ஆனால், அவன் முன்பின் போர் செய்து அறியாதவன் என் பதுஅக்கொற்களின் உட்கருத்து அடுத்த இருஅடிகள் அதிய மானையும், அவன் படைக்கலங்களையும் பழிப்பன போல உள்ளன. ஆனால், ஒயாது போர்செய்து வெற்றிபெறும் வீரன் அவன் என்பதும் குறிப்பால் பெற வைத்தார் புலவர் ; பிற்பகுதியில் அவன் வள்ளல் தன்மையையும், பிறருக்குத் தீங்கு நினையாதவன் அதியமான் என்பதனை யும், அவன் அதிகாரச் செருக்கு அற்றவன் என்பதனையும் கூறிவிட்டார் ; அவனிடம் போருக்குப் போவதே பெரிய பாவம் என்பதைக் குறிப்பாகக் கூறிவிட்டார். பாடலால் அதியன் மதிப்பு உயர்ந்தது; தொண்டைமான் செருக்கு அடங்கியது. அம்மட்டோ! யோரும் நின்றுவிட்டது.